அந்த வானுக்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி.உன்னி கிருஷ்ணன்சிவாபூமகள் ஊர்வலம்

Antha Vaanukku Song Lyrics in Tamil


ஆண் : அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்…
அவை சூரிய சந்திரரே…
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்…
என் தாயோடு தந்தையரே…

ஆண் : அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்…
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே…
என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்…
என் வாழ்வில் ஒளியும் இல்லையே…
ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே…

ஆண் : தாய்தானே அன்புக்கு ஆதாரம்…
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்…

ஆண் : அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்…
அவை சூரிய சந்திரரே…

—BGM—

ஆண் : நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி…
தாய்க்கு பூஜைகள் செய்க…

—BGM—

ஆண் : இமய மலைகளும் ஏழு கடல்களும்…
தந்தை நாமமே சொல்க…

—BGM—

ஆண் : இவர் கோபங்கள் நானும் பார்த்ததில்லை…
ஒரு சுடுசொல்லைக் கூட கேட்டதில்லை…
ஒரு ஏழை தாய்போல் உலகில் செல்வமில்லை…

ஆண் : தாய்தானே அன்புக்கு ஆதாரம்…
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்…

ஆண் : அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்…
அவை சூரிய சந்திரரே…

—BGM—

ஆண் : தந்தை காலடி தாயின் திருவடி…
நல்ல மகனுக்குக் கோயில்…

—BGM—

ஆண் : அன்பின் முகவரி என்ன என்பதை…
கண்டுகொள்கிறேன் தாயில்…

—BGM—

ஆண் : நான் உறவென்ற தீபம் ஏற்றிவைப்பேன்…
அதில் உயிர் என்ற எண்ணெய் ஊற்றிவைப்பேன்…
நான் என்றும் கண்ணில் இருவரை சுமந்திருப்பேன்…

ஆண் : தாய்தானே அன்புக்கு ஆதாரம்…
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்…

—BGM—


Notes : Antha Vaanukku Song Lyrics in Tamil. This Song from Poomagal Oorvalam (1999). Song Lyrics penned by Vairamuthu. அந்த வானுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading