அன்பே என் அன்பே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திராஹரிஸ் ஜெயராஜ்தாம் தூம்

Anbe En Anbe Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…
இத்தனை நாளாய் தவித்தேன்…

—BGM—

ஆண் : கனவே கனவே கண் உறங்காமல்…
உலகம் முழுதாய் மறந்தேன்…

—BGM—

ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம்…
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்…
அன்பில் அடை மழைக்காலம்…
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்…

—BGM—

ஆண் : நீ நீ ஒரு நதி அலை ஆனாய்…
நான் நான் அதில் விழும் இலை ஆனேன்…
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ…
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ… ஓ…

ஆண் : மழையினிலே பிறக்கும் நதி…
கடலினிலே கலக்கும்…
மனதினிலே இருப்பதெல்லாம்…
மெளனத்திலே கலக்கும்…

ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…
இத்தனை நாளாய் தவித்தேன்…
கனவே கனவே கண் உறங்காமல்…
உலகம் முழுதாய் மறந்தேன்…

ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம்…
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்…
அன்பில் அடை மழைக்காலம்…
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்…

—BGM—

ஆண் : நீ நீ புது கட்டளைகள் விதிக்க…
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க…
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே…
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே…

ஆண் : எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம்…
தெரியவில்லை கணக்கு…
எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்…
புரியவில்லை நமக்கு…

ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…

—BGM—

ஆண் : கனவே கனவே கண் உறங்காமல்…

—BGM—

ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம்…
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்…
அன்பில் அடை மழைக்காலம்…
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்…

—BGM—


Notes : Anbe En Anbe Song Lyrics in Tamil. This Song from Dhaam Dhoom (2008). Song Lyrics penned by Na. Muthukumar. அன்பே என் அன்பே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading