அலை அலையாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக்கார்த்திக்நவரசா

Alai Alaiyaaga Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அலை அலையாக அலை அலையாக…
எனக்குள்ளே பாய்கிறாய்…
ஒவ்வொரு மோதலும் ஒவ்வொரு காதலாய்…

ஆண் : துளி துளியாக துளி துளியாக…
இதயத்தில் வீழ்கிறாய்…
ஒவ்வொரு தூறலும் ஒவ்வொரு காதலாய்…

ஆண் : பாற்கடலும் பனித்துளியில்…
அடங்கிடும் என்கிறாய்…
அருவிகளை இரு விழியில்…
அடக்கிட சொல்கிறாய்…
கண்கள் மூடினேன் கண்ணீர் ஆகிறாய்…

—BGM—

ஆண் : ஒவ்வொரு தூறலும் ஒவ்வொரு காதலாய்…

—BGM—

ஆண் : முகை முகையாக முகை முகையாக…
மனமெங்கும் பூக்கிறாய்…
ஒவ்வொரு வாசமும் ஒவ்வொரு காதலாய்…

ஆண் : முதல் முதலாக முதல் முதலாக…
எனதிசை கேட்கிறாய்…
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காதலாய்…

ஆண் : பாலமுதும் தேன் தமிழும் பொழிந்தவள் நீயடி…
உனக்கென நான் எழுதியதை முழுவதும் கேளடி…
எந்தன் பாடலும் உன் பேத்திதானடி…


Notes : Alai Alaiyaaga Song Lyrics in Tamil. This Song from Navarasa (2021). Song Lyrics penned by Madhan Karky. அலை அலையாக பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading