சும்மா கிடந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & கல்யாணி நாயர்வித்யாசாகர்தம்பி (2006)

Summa Kidandha Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு…
சோளம் போட்டுபுட்டேன்…
அது கொண்டைய கொண்டைய ஆட்டி கிட்டு…
கொத்த வாரதென்ன…

பெண் : சுத்தி திரிஞ்ச பூனைகுட்டிக்கு…
சோத்த போட்டுபுட்டேன்…
அது வெள்ளி பானையில் பால குடிக்க…
துள்ளி வாரதென்ன…

—BGM—

ஆண் : சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு…
சோளம் போட்டுபுட்ட…
அது கொண்டைய ஆட்டி கொஞ்ச வந்தா…
குத்தம் சொல்வதென்ன… எட்டி போறதென்ன…

—BGM—

ஆண் : வெயிலும் அடிச்சு மழையும் பெஞ்சா…
நரிக்கும் நரிக்கும் கல்யாணம்…
எது அடிச்சு எது பெஞ்சா…
எனக்கும் உனக்கும் கல்யாணம்…

—BGM—

பெண் : பாக்கு கடிச்சு வெத்தல போட்டா…
பச்ச நாக்கு செவக்குமா…
எது கடிச்சு எது போட்டா…
எனக்கும் உனக்கும் செவக்குமா…

ஆண் : நெத்தி பொட்டுக்காரி நெருங்கி வா பக்கமா…
பெண் : சொட்ட வாலை மீனு உணவுக்கு சிக்குமா…

ஆண் : பசிக்குது கண்ணு பந்தி வச்சா குத்தமா…
பெண் : விரலில் எடுத்து குத்துவது தப்புமா…

—BGM—

பெண் : சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு…
சோளம் போட்டுபுட்டேன்…

ஆண் : அது கொண்டைய ஆட்டி கொஞ்ச வந்தா…
குத்தம் சொல்வதென்ன…

பெண் : கொத்த வாரதென்ன…

—BGM—

பெண் : கல்லில் சிலைய அடிச்சு முடிச்சா…
கடைசி வேலை கண் திறப்பு…
எது அடிச்சு எது முடிச்சா…
எனக்கும் உனக்கும் கடை திறப்பு…

—BGM—

ஆண் : உப்பில் உரசி மொளகா கடிச்சா…
உதட்டில் ஏறும் விறு விறுப்பு…
எது உரசி எது கடிச்சா…
எனக்கும் உனக்கும் சுறு சுறுப்பு…

பெண் : கள்ளிப்பட்டி காள கயித்தையே அக்குதே…
ஆண் : சேல கீழ பாத்தா சிலுப்பிதான் நிக்குது…

பெண் : வயசு பொண்ண கண்டா…
வளைச்சுத்தான் குத்துது…

ஆண் : குத்த வச்ச பொண்ணுதான்…
கொம்ப சீவி விட்டது…

—BGM—

ஆண் : சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு…
சோளம் போட்டுபுட்ட…

பெண் : அது கொண்டைய கொண்டைய ஆட்டி கிட்டு…
கொத்த வாரதென்ன…

ஆண் : சுத்தி திரிஞ்ச பூனைகுட்டிக்கு…
சோத்த போட்டுபுட்ட…

பெண் : அது வெள்ளி பானையில் பால குடிக்க…
துள்ளி வாரதென்ன…

—BGM—


Notes : Summa Kidandha Song Lyrics in Tamil. This Song from Thambi (2006). Song Lyrics penned by Na. Muthukumar. சும்மா கிடந்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading