| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மதன் கார்க்கி | கார்த்திக் | கார்த்திக் | நவரசா |
Alai Alaiyaaga Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அலை அலையாக அலை அலையாக…
எனக்குள்ளே பாய்கிறாய்…
ஒவ்வொரு மோதலும் ஒவ்வொரு காதலாய்…
ஆண் : துளி துளியாக துளி துளியாக…
இதயத்தில் வீழ்கிறாய்…
ஒவ்வொரு தூறலும் ஒவ்வொரு காதலாய்…
ஆண் : பாற்கடலும் பனித்துளியில்…
அடங்கிடும் என்கிறாய்…
அருவிகளை இரு விழியில்…
அடக்கிட சொல்கிறாய்…
கண்கள் மூடினேன் கண்ணீர் ஆகிறாய்…
—BGM—
ஆண் : ஒவ்வொரு தூறலும் ஒவ்வொரு காதலாய்…
—BGM—
ஆண் : முகை முகையாக முகை முகையாக…
மனமெங்கும் பூக்கிறாய்…
ஒவ்வொரு வாசமும் ஒவ்வொரு காதலாய்…
ஆண் : முதல் முதலாக முதல் முதலாக…
எனதிசை கேட்கிறாய்…
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காதலாய்…
ஆண் : பாலமுதும் தேன் தமிழும் பொழிந்தவள் நீயடி…
உனக்கென நான் எழுதியதை முழுவதும் கேளடி…
எந்தன் பாடலும் உன் பேத்திதானடி…
Notes : Alai Alaiyaaga Song Lyrics in Tamil. This Song from Navarasa (2021). Song Lyrics penned by Madhan Karky. அலை அலையாக பாடல் வரிகள்.

