alagiya-sirukki-song-lyrics

அழகிய சிறுக்கி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகோல்டு தேவராஜ்ஜிப்ரான்க/பெ.ரணசிங்கம்

Alagiya Sirukki Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகிய சிறுக்கி அருவா மூக்கி…
உன்ன ஒன்னு கேக்கட்டுமா…
ஏ நெஞ்சுக்குள்ள உனக்கு…
ஈர நப்பு இருக்கா…
நீரோட்டம் பாக்கட்டுமா…

ஆண் : ஏ… அழகிய சிறுக்கி அருவா மூக்கி…
உன்ன ஒன்னு கேக்கட்டுமா…
நெஞ்சுக்குள்ள உனக்கு…
ஈர நப்பு இருக்கா…
நீரோட்டம் பாக்கட்டுமா…

ஆண் : என் தராதாரம் காங்காமலே…
அடாவடி பண்ணாதடி….
நான் சராசரி ஆள் இல்லடி…
தண்ணி காட்டி போகாதடி…

குழு ஆண்கள் : கைவிட்டு போனாக் கூட…
காதல் தீராது…
கத்தாழைச் சோறு மட்டும்…
ஈரம் மாறாது…

குழு ஆண்கள் : கைவிட்டு போனாக் கூட…
காதல் தீராது…
கத்தாழைச் சோறு மட்டும்…
ஈரம் மாறாது…

BGM

ஆண் : கண்ணுக்கெட்டும் தூரம் மட்டும்…
இத்துணுண்டு பச்சையில…
காஞ்சு போன தரிசிருக்கு…

ஆண் : அத்துவான காட்டுக்குள்ள…
ஒத்த ஒத்த பட்டாம்பூச்சி…
அதுக்குள்ள உசுரிருக்கு…

குழு ஆண்கள் : கம்மாயே காஞ்சாலும்…
கருவேலம் பூ பூக்கும்…
எம்மா நீ போனாலே…
உசுர் பூக்குமா…

குழு ஆண்கள் : முந்தான எனக்காக…
முழு வேட்டி உனக்காக….
பசும்பொன்னில் தாலி செஞ்சாச்சு…
கழுத்த காட்டு…

ஆண் : அழகிய சிறுக்கி அருவா மூக்கி…
உன்ன ஒன்னு கேக்கட்டுமா…
ஏ நெஞ்சுக்குள்ள உனக்கு…
ஈர நப்பு இருக்கா…
நீரோட்டம் பாக்கட்டுமா…

ஆண் : ஏ… அழகிய சிறுக்கி அருவா மூக்கி….
உன்ன ஒன்னு கேக்கட்டுமா…
நெஞ்சுக்குள்ள உனக்கு…
ஈர நப்பு இருக்கா…
நீரோட்டம பாக்கட்டுமா…

ஆண் : என் தராதாரம் காங்காமலே…
அடாவடி பண்ணாதடி…
நான் சராசரி ஆள் இல்லடி…
தண்ணி காட்டி போகாதடி…

குழு ஆண்கள் : கைவிட்டு போனாக் கூட…
காதல் தீராது…
கத்தாழைச் சோறு மட்டும்…
ஈரம் மாறாது…

குழு ஆண்கள் : கைவிட்டு போனாக் கூட…
காதல் தீராது…
கத்தாழைச் சோறு மட்டும்…
ஈரம் மாறாது…

BGM

ஆண் : என்னை விட்டு நீ கடந்தா…
உன்னைவிட்டு நான் பிரிஞ்சா…
மண்ணை விட்டு மறஞ்சிருப்பேன்…

ஆண் : மீன் செத்து மெதக்குற…
குளத்துல நதியில…
நான் செத்து மிதந்திருப்பேன்…

குழு ஆண்கள் : என்னனென்ன ஆனாலும்…
என்னாவி போனாலும்…
உன் நெஞ்சில் உக்காந்து…
உசிர் வாழ்வேன்…

குழு ஆண்கள் : உன் வீட்டு கூரையில…
ஒழுகும் நீர் நானாவேன்…
ஒத்தைத் துளி பார்வை பார் கண்ணு…
ஓரம் நின்னு…

ஆண் : அழகிய சிறுக்கி அருவா மூக்கி…
உன்ன ஒன்னு கேக்கட்டுமா…
ஏ நெஞ்சுக்குள்ள உனக்கு…
ஈர நப்பு இருக்கா…
நீரோட்டம் பாக்கட்டுமா…

ஆண் : ஏ… அழகிய சிறுக்கி அருவா மூக்கி…
உன்ன ஒன்னு கேக்கட்டுமா…
நெஞ்சுக்குள்ள உனக்கு…
ஈர நப்பு இருக்கா…
நீரோட்டம் பாக்கட்டுமா…

ஆண் : என் தராதாரம் காங்காமலே…
அடாவடி பண்ணாதடி…
நான் சராசரி ஆள் இல்லடி….
தண்ணி காட்டி போகாதடி…

குழு ஆண்கள் : கைவிட்டு போனாக் கூட…
காதல் தீராது…
கத்தாழைச் சோறு மட்டும்…
ஈரம் மாறாது…

குழு ஆண்கள் : கைவிட்டு போனாக் கூட…
காதல் தீராது…
கத்தாழைச் சோறு மட்டும்…
ஈரம் மாறாது…

BGM


Notes : Alagiya Sirukki Song Lyrics in Tamil. This Song from Ka Pae Ranasingam (2020). Song Lyrics penned by Vairamuthu. அழகிய சிறுக்கி பாடல் வரிகள்