ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தவசீலன்பி. சுசீலாகே. வீரமணிஅம்மன் பாடல்கள்

Aayiram Ithazh Konda Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ…
எங்கள் தேவி முகம்…
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்…

பெண் : ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ…
எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்…

பெண் : மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும்…
மங்கலச் செல்வம்…
மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும்…
மங்கலச் செல்வம்…
அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும்…
கலியுக தெய்வம்…

பெண் : ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ…
எங்கள் தேவி முகம்…

BGM

பெண் : ஆனி மறைந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்…
கருமாரியம்மனின் அருள் மழையாலே மண்குளிரும்…
ஆனி மறைந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்…
கருமாரியம்மனின் அருள் மழையாலே மண்குளிரும்…

பெண் : முன்னை வினைகளை ஓடிடச் செய்யும்…
அன்னையின் தீர்ப்பு…
முன்னை வினைகளை ஓடிடச் செய்யும்…
அன்னையின் தீர்ப்பு…
அவள் முத்துக் கரங்களில் சூட்டி மகிழ்வோம்…
சந்தனக் காப்பு…

பெண் : ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ…
எங்கள் தேவி முகம்…
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்…

பெண் : மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும்…
மங்கலச் செல்வம்…
அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும்…
கலியுக தெய்வம்…

பெண் : ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ…
எங்கள் தேவி முகம்…

BGM

பெண் : நதியாய்ப் பாயும் பன்னீராலே அபிஷேகம்…
தினம் நாற்பது கோடி நறுமலராலே அலங்காரம்…
நதியாய்ப் பாயும் பன்னீராலே அபிஷேகம்…
தினம் நாற்பது கோடி நறுமலராலே அலங்காரம்…

பெண் : தங்க ரதத்தில் அம்மன் அமர்ந்து ஊர்கோலம்…
தங்க ரதத்தில் அம்மன் அமர்ந்து ஊர்கோலம்…
அவள் தரிசனம் கண்டு துதிப்பவர்க்கெல்லாம் நலம் சேரும்…

பெண் : ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ…
எங்கள் தேவி முகம்…
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்…

பெண் : மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும்…
மங்கலச் செல்வம்…
அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும்…
கலியுக தெய்வம்…

பெண் : கலியுக தெய்வம்…
கருமாரி கலியுக தெய்வம்…
கலியுக தெய்வம்…
கருமாரி கலியுக தெய்வம்…

BGM


Notes : Aayiram Ithazh Konda Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Thavaseelan. ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ பாடல் வரிகள்.


Scroll to Top