ஆஹா மெல்ல நட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபுதிய பறவை

Aaha Mella Nada Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…

—BGM—

ஆண் : ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…
முல்லை மலர் பாதம் நோகும்…
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்…
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்… ஓஓஓ ஹோ…

ஆண் : ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…

—BGM—

ஆண் : படுக்கையை இறைவன் விரித்தான்…
வரும் பனித்திரையால் அதை மறைத்தான்…
படுக்கையை இறைவன் விரித்தான்…
வரும் பனித்திரையால் அதை மறைத்தான்…

ஆண் : பருவத்தில் ஆசையை கொடுத்தான்…
வரும் நாணத்தினால் அதை தடுத்தான்…
வரும் நாணத்தினால் அதை தடுத்தான்…

ஆண் : ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…

—BGM—

ஆண் : அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு…
அதில் அழகிய மேனியின் நடிப்பு…
அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு…
அதில் அழகிய மேனியின் நடிப்பு…

ஆண் : பட படவென வரும் துடிப்பு…
இன்று பதுங்கியதே என்ன நினைப்பு…
இன்று பதுங்கியதே என்ன நினைப்பு…

ஆண் : ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…
முல்லை மலர் பாதம் நோகும்…
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்…
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்… ஓஓஓ ஹோ…

ஆண் : ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…

—BGM—

ஆண் : திருமணம் என்றதும் அடக்கம்…
கண்கள் திறந்திருந்தாலும் உறக்கம்…
வருவதை நினைத்தால் நடுக்கம்…
பக்கம் வந்து விட்டாலோ மயக்கம்…
பக்கம் வந்து விட்டாலோ மயக்கம்…

ஆண் : ஹையோ… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…
முல்லை மலர் பாதம் நோகும்…
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்…
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்… ஓஓஓ ஹோ…

ஆண் : ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…

—BGM—


Notes : Aaha Mella Nada Song Lyrics in Tamil. This Song from Puthiya Paravai (1964). Song Lyrics penned by Kannadasan. ஆஹா மெல்ல நட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading