ஆகாய வெண்ணிலாவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉமா ரமணன் & கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாஅரங்கேற்ற வேளை

Aagaya Vennilave Song Lyrics in Tamil

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…

—BGM—

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…

ஆண் : மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட…
பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட…

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…

—BGM—

ஆண் : தேவார சந்தம் கொண்டு தினம்பாடும் தென்றல் ஒன்று…
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று…

பெண் : தென் பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு…
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று…

ஆண் : இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்…
பெண் : கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்…

ஆண் : கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனிதான் ஆட…
பெண் : நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட…

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…

ஆண் : மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட…
பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட…

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…

—BGM—

பெண் : தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்…
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்…

ஆண் : வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்…
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கேட்கக் கூடும்…

பெண் : அடியாளின் ஜீவன் மேனி அதிகாரம் செய்வதென்ன…
ஆண் : அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன…

பெண் : இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட…
ஆண் : ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட…

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…

பெண் : மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட…
ஆண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ…
ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ…

Notes : Aagaya Vennilave Song Lyrics in Tamil. This Song from Arangetra Velai (1990). Song Lyrics penned by Vaali. ஆகாய வெண்ணிலாவே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading