வானுயர்ந்த சோலையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாவலர் வரதராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஇதய கோயில்

Vaanuyarntha Solaiyile Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…

ஆண் : வானுயர்ந்த சோலையிலே…

—BGM—

ஆண் : வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்…
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை…
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்…
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை…

ஆண் : தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்…
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்…
வீணாகப் போகும் என்று யாரேனும் நினைக்கவில்லை…

ஆண் : வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
நானிருந்து வாடுகின்றேன்…
நாவறண்டு பாடுகின்றேன்…

ஆண் : வானுயர்ந்த சோலையிலே…

—BGM—

ஆண் : ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே…
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி…
ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே…
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி…

ஆண் : பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து…
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து…
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி…

ஆண் : வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…

ஆண் : வானுயர்ந்த சோலையிலே…

Notes : Vaanuyarntha Solaiyile Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Pavalar Varadharajan. வானுயர்ந்த சோலையிலே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading