| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மதன் கார்க்கி | யுவன் ஷங்கர் ராஜா & சந்தோஷ் நாராயணன் | யுவன் ஷங்கர் ராஜா | ஏழு கடல் ஏழு மலை |
Yezhezhu Malai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஏழேழு மலை ஏழு கடல்தாண்டி…
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி…
ஆண் : காடோடு பாலை வயல்வெளி தாண்டி…
நாடோடி அலைகிறேன் உனைத் தேடி…
ஆண் : எங்கேயும் உன் தடம் இல்லை…
நீ இல்லா மண்ணேதும் என் இடம் இல்லை…
ஆண் : சில ஆயிரமாண்டாய் காத்திருந்தே…
நூறாயிரம் ஆசைகள் சேர்ந்திருந்தே…
ஆண் : ஏழேழு மலை ஏழு கடல்தாண்டி…
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி…
ஆண் : காடோடு பாலை வயல்வெளி தாண்டி…
நாடோடி அலைகிறேன் உனைத் தேடி…
—BGM—
ஆண் : இலையோடும் மலரோடும் உன் விரல் ரேகை…
வழியெல்லாம் வழியெல்லாம் உன் குழல் வாசம்…
நீரோடை முழுதும் உன் வேர்வைக் கயல்கள்…
முட் புதரின் இடையில் உன் பார்வை முயல்கள்…
ஆண் : இத்தேடல் முடிந்தால் நீ அங்கே இருந்தால்…
என் நெஞ்சம் உடைந்தாலும் உடையும்…
ஆண் : கவிதைகள் அனைத்தும் தொலைத்த ஓர் மொழியாய்…
உனை உனை இழந்தே வாடுகிறேன்…
தனைக் கண்ட விழியைத் தொலைத்த ஓர் கனவாய்…
திசைகெட்டுத் தறிகெட்டு ஒடுகிறேன்…
ஆண் : ஏழேழு மலை ஏழு கடல்தாண்டி…
எங்கெங்கோ அலைகிறேன் உயிர் தேடி…
ஆண் : காடோடு பாலை வயல்வெளி தாண்டி…
நாடோடி அலைகிறேன் உனைத் தேடி…
உனைத் தேடி…
—BGM—
Notes : Yezhezhu Malai Song Lyrics in Tamil. This Song from Yezhu Kadal Yezhu Malai (2024). Song Lyrics penned by Madhan Karky. ஏழேழு மலை பாடல் வரிகள்.
