பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | சித் ஶ்ரீராம் | டி. இமான் | அண்ணாத்த |
Yennuyirey (Male) Song Lyrics in Tamil
ஆண் : ஹா… ஆஅ… ஆஅ… ஆ…
—BGM—
ஆண் : ஆஅ… ஆஅ…
—BGM—
ஆண் : என்னுயிரே என்னுயிரே…
யாவும் நீதானே…
கண் இரண்டில் நீ இருந்து…
பார்வை தந்தாயே…
ஆண் : உறவென்று சொன்னால் நீதானே…
உதிரத்தில் ஓடும் பூந்தேனே…
வரமும் தவமும் நீயே…
வலியும் மருந்தும் நீயே…
உயிரினில் கலந்த என் தாயே…
ஆண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்…
செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்…
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்…
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்…
குழு (ஆண்கள்) : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்…
செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்…
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்…
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்…
ஆண் : என்னுயிரே என்னுயிரே…
யாவும் நீதானே…
கண் இரண்டில் நீ இருந்து…
பார்வை தந்தாயே…
—BGM—
ஆண் : பூமாலை கோடி பொன் ஆரம் சூடி…
நீ நிற்கும் கோலம் அம்மம்மா…
ஊரார்கள் கூடி உன் வாழ்த்து பாடி…
தோய்கின்ற நேரம் கண்ணம்மா…
ஆண் : நிழல் என நான் நீண்டு இருப்பேன்…
அடி எடுத்து நீ போக…
குடை பிடித்தே கூரை கொடுப்பேன்…
வெயில் மழையில் காப்பாக…
ஆண் : தங்கை திருமுகம் நெஞ்சில் நிறைகிறதே…
தும்பை மலரிலும் மஞ்சள் வழிகிறதே…
புத்தம் புது விடியலும் புலருதே…
ஆண் : என்னுயிரே என்னுயிரே…
யாவும் நீதானே…
கண் இரண்டில் நீ இருந்து…
பார்வை தந்தாயே…
ஆண் : ஒரு கொடி பூக்கள் நாம்தானே…
கொடி அது சாய்ந்தும் பூத்தோமே…
இனிய சுமையாய் தோளில்…
இறுக அணைத்த நாளில்…
அன்னை என என்னை உணர்ந்தேனே…
ஆண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்…
செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்…
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்…
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்…
ஆண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்…
செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்…
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்…
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்…
ஆண் : என்னுயிரே…
Notes : Yennuyirey (Male) Song Lyrics in Tamil. This Song from Annaatthe (2021). Song Lyrics penned by Thamarai. என்னுயிரே (ஆண்) பாடல் வரிகள்.