தெய்வம் நீதானே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபவித்ரா சாரிடி. இமான்உடன்பிறப்பே

Deivam Neethaaney Song Lyrics in Tamil


BGM

பெண் : தெய்வம் நீதானே…
தாயும் நீதானே…
அண்ணனே உனை தள்ளியே மனம் போகாதே…

பெண் : தெய்வம் நீதானே…
தாயும் நீதானே…
அண்ணனே உனதன்புமே கரை காணாதே…

பெண் : உறவே ஆடும் ஊஞ்சல் கயிறோ…
வானம் வரையில் நீளுமே…
உயிரே போடும் கோலம் இதிலே…
வாழ்வின் வசந்தம் கூடுமே…

பெண் : ஒளிரும் உன் கண்ணிலே…
பெருகும் ஆனந்தமே…
உலகம் ஓய்ந்தாலுமே…
தொடரும் நம் சொந்தமே…

BGM

பெண் : தெய்வம் நீதானே…
தாயும் நீதானே…
அண்ணனே உனை தள்ளியே மனம் போகாதே…

BGM

பெண் : வெயிலோ மழையோ வருமுன்…
குடையாகிடும் உறவு இதே…
தவமே புரிய வரம் தான்…
அண்ணன் என்று ஆனதே…

பெண் : குறையே சொல்லாத உன் அன்பாலே…
துளியும் கண்ணீரை பார்த்ததில்லை…
விலையே இல்லாத உன் முன்னாலே…
விறகும் ஆகாதோ பூங்கிளை…

பெண் : அருகில் இருந்தாலும் அழுது வழிந்தாலும்…
நினைவுனை நாளும் பேசுமே…
நரைகள் விழுந்தாலும் நரம்பு தளர்ந்தாலும்…
விலக விரும்பாது பாசமே…

BGM

பெண் : தெய்வம் நீதானே…
தாயும் நீ தானே…
அண்ணனே உனை தள்ளியே மனம் போகாதே…

பெண் : தெய்வம் நீதானே…
தாயும் நீதானே…
அண்ணனே உனதன்புமே கரை காணாதே…

பெண் : உறவே ஆடும் ஊஞ்சல் கயிறோ…
வானம் வரையில் நீளுமே…
உயிரே போடும் கோலம் இதிலே…
வாழ்வின் வசந்தம் கூடுமே…

பெண் : ஒளிரும் உன் கண்ணிலே…
பெருகும் ஆனந்தமே…
உலகம் ஓய்ந்தாலுமே…
தொடரும் நம் சொந்தமே…

BGM

பெண் : தெய்வம் நீதானே…
தாயும் நீதானே…


Notes : Deivam Neethaaney Song Lyrics in Tamil. This Song from Udanpirappe (2021). Song Lyrics penned by Yugabharathi. தெய்வம் நீதானே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top