ஹே கொஞ்சிப் பேசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்இளையராஜா & சுஜாதா மோகன்இளையராஜாகாதல் கவிதை

Yei konji Peasum Song Lyrics in Tamil


ஆண் : ஹே கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா…

—BGM—

ஆண் : ஹே கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா…
ஹே பூஞ்சிவப்பு ஒம் முகத்தில் என்னம்மா…
நிழலப் போல நிழலப் போல உறவாடு…
என் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோடு…
அடி ஆரி ராரி ராரி ராரி…

ஆண் : ஹே கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா…
ஹே பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா…

—BGM—

பெண் : ஹே வீணே மறைக்கிற நீயே நீயே…
தானே சிரிக்கிற நீயே நீயே…
ஏனோ ஏனோ வெளி வேஷம்…
தெனம் ஊரு தூங்க வரும் பாசம்…

ஆண் : ஹே சின்னக் கொழந்ததான் நானே மானே…
வேஷம் போடவில்ல வீணே…
நெஞ்சில் பாசம் பொங்குதடி மானே…

ஆண் : சிறு வாடக் காத்து வீசுறப்போ கோபம் ஏன்…
நீ சூடும் பூவு வாடிப் போகும் செல்லம்மா…
சின்னக் கண்ணம்மா… ஏஹேஹே…

ஆண் : ஹே கொஞ்சிப் பேசு…
கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா…
ஹே பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா…

—BGM—

ஆண் : பூவ ரசிக்கிற பூவே பூவே…
தானா மணக்குற நீயே நீயே…
பொன்னப் போல ஒரு வாசம்…
எந்தப் பூவும் பூக்குறப்போ வீசும்…

பெண் : எங்கே தொடங்குற பேச்சு பேச்சு…
அது எதுக்கு எதுக்கு சொல்லு மாமா…
விடி வெளக்க ஏத்தி வெக்கலாமா…

பெண் : வலையப் போட்டு மீனப் புடிக்கும் ஆம்பள…
நீ வலைய வீசிப் புடிக்க இங்கே மீனில்ல…
அது நானில்ல…

ஆண் : ஹே கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா…
பெண் : ஹே கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா…

ஆண் : ஹே பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா…

பெண் : நிழலப் போல நிழலப் போல உறவாடு…
உன் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோட…
அடி ஆரி ராரி ராரி ராரி…

பெண் : ஹே கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா…
ஆண் : ஹே தானா தானா தானா தானே னானன்னா…
பெண் : ஹே ராசா மேலே ஆச வச்சேன் நானையா…

குழு : கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ…
கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ…


Notes : Yei konji Peasum Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kavithai (1998). Song Lyrics penned by Agathiyan. ஹே கொஞ்சிப் பேசு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading