யாரோடு யாரென்ற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஇதயத் தாமரை

Yarodu Yaar Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி…
விதி வந்து விடை சொல்லுமா…
கடலோடு நதிகூட காயும்…
என் கண்ணீர் காயாதம்மா…

ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி…
விதி வந்து விடை சொல்லுமா…
கடலோடு நதிகூட காயும்…
என் கண்ணீர் காயாதம்மா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நேற்று என் நெஞ்சில் பூ வைத்தவள்…
இன்று என் நெஞ்சில் தீ வைப்பதா…
நேற்று என் வீட்டில் பால் வைத்தவள்…
நாளை வாழ்வுக்கு நாள் வைப்பதா…

ஆண் : நிழல் தேடி வந்தாள் நிஜமாகினாள்…
நிஜம் வந்த நேரம் நிழலாகினாள்…
கண்ணோடு சேர்த்தேன் கனவாக ஆனாள்…

ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி…
விதி வந்து விடை சொல்லுமா…
கடலோடு நதிகூட காயும்…
என் கண்ணீர் காயாதம்மா…

BGM

ஆண் : மீன்கள் எப்போதும் தண்ணீரிலே…
ஞானம் இப்போது கண்ணீரிலே…
கால்கள் எப்போதும் கண்போக்கிலே…
காதல் எப்போதும் பெண்போக்கிலே…

ஆண் : மேகங்கள் இல்லா வானம் உண்டு…
சோகங்களில்லா வாழ்வும் உண்டா…
அலையில்லை என்னும் கடலொன்று உண்டா…

ஆண் : யாரோடு யாரென்ற கேள்வி…
விதி வந்து விடை சொல்லுமா…
கடலோடு நதிகூட காயும்…
என் கண்ணீர் காயாதம்மா…

BGM


Notes : Yarodu Yaar Song Lyrics in Tamil. This Song from Idhaya Thamarai (1990). Song Lyrics penned by Vairamuthu. யாரோடு யாரென்ற பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading