கண்ணே கதவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாஇதயத் தாமரை

Kanne Kadhavu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணே கதவு திறந்திடும் முன்னே…
கதைகள் படிக்கணும் பெண்ணே…
தனிமைதான்… இனிமைதான்…
காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு…

பெண் : கண்ணா கதவு திறக்கட்டும் கண்ணா…
மனசு நடுங்குது மன்னா…
தனிமையோ… இனிமையோ…
புத்தனவன் சொல்லி வைத்த புத்தகத்தை மெல்ல எடு…

—BGM—

ஆண் : இன்பமென்னும் புத்தகம்…
இங்கு எங்கு உள்ளதோ…
குழு : தேடு கொஞ்சம் தேடு…

பெண் : காமன் சொன்ன சூத்திரம்…
உன்னிடத்தில் உள்ளது…
குழு : பாடு அளவோடு…

ஆண் : பள்ளி இது பிறர்க்கு…
பள்ளியறை நமக்கு…

பெண் : இன்பமிது உனக்கு…
துன்பமிது எனக்கு…

ஆண் : அடி பட்டிமன்ற வாதமிங்கு கூடாது…

பெண் : கண்ணா கதவு திறக்கட்டும் கண்ணா…
மனசு நடுங்குது மன்னா…

ஆண் : தனிமைதான்… இனிமைதான்…
காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு…

—BGM—

பெண் : உண்மையில்லை என்பதால் ஊருலகம் நம்புமா…
குழு : நாளை அதிகாலை…

ஆண் : உண்மையென்று சொல்லுவேன்…
மாலைக் கட்டிக் கொள்ளுவேன்…
நாளை இந்த வேளை…

பெண் : தப்பு இந்த நெருக்கம்…
தாங்கவில்லை எனக்கும்…

ஆண் : காலை வரும் வரைக்கும்…
காதலுக்கு வணக்கம்…

பெண் : அட கட்டழகன் தொட்ட இடம் பூப்பூக்கும்…

ஆண் : கண்ணே கதவு திறந்திடும் முன்னே…
கதைகள் படிக்கணும் பெண்ணே…
தனிமைதான்… இனிமைதான்…
காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு…

பெண் : கண்ணா கதவு திறக்கட்டும் கண்ணா…
மனசு நடுங்குது மன்னா…
தனிமையோ… இனிமையோ…
புத்தனவன் சொல்லி வைத்த புத்தகத்தை மெல்ல எடு…

—BGM—


Notes : Kanne Kadhavu Song Lyrics in Tamil. This Song from Idhaya Thamarai (1990). Song Lyrics penned by Vairamuthu. கண்ணே கதவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading