நில்லாத வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜா & உமா ரமணன்இளையராஜாஆணழகன்

Nilatha Vennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் கண் வழி…

ஆண் : நில்லாமலே நீ போவதேன்…
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்…

பெண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் வாசலில்…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் பார்வையில்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : மான் துள்ளும் மலையாளத்தின்…
எழில் சித்திரமே சித்திரமே…
வாழையும் இளநீரையும் கொண்ட…
நன்னிலமே நன்னிலமே…

பெண் : கேரளக் குயில் கூவிடும் இசை…
தித்தித்ததோ தித்தித்ததோ…
ஆவணி திருவோணத்தில் உன்னை…
சந்தித்ததோ சந்தித்ததோ…

ஆண் : பொன்னல்லோ சிறு பூவல்லோ…
மெல்ல தொடவோ என்னைத் தரவோ…

பெண் : தேனல்லோ பசும்பாலல்லோ…
பக்கம் வரவோ நான் தரவோ…

ஆண் : செம்மீன்கள் துள்ளுதே…
இங்கும் அங்கும் கண் ஓடையில்…

பெண் : சந்தோஷம் பொங்குதே…
முன்னும் பின்னும் உன் கூடலில்…
நான் சொல்லவோ சின்ன பூவல்லவோ…

ஆண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் கண் வழி…

பெண் : நில்லாமலே நீ போவதேன்…
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்…

ஆண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் கண் வழி…

BGM

பெண் : நீ வர எதிர்ப்பார்த்தது…
இந்த நந்தவனம் நந்தவனம்…
நீ தொட இங்கு பூத்தது…
இந்த செங்கமலம் செங்கமலம்…

ஆண் : காமனின் கலைக் காண்பது…
இந்த அந்தப்புரம் அந்தப்புரம்…
பூமரக் குயில் கூவுது…
இங்கு ஸப்தஸ்வரம் ஸப்தஸ்வரம்…

பெண் : மஞ்சமே இந்த நெஞ்சமே…
சுகம் பஞ்சமோ இனி கொஞ்சமோ…

ஆண் : உள்ளமே இன்ப வெள்ளமே…
உன்னை அள்ளவோ அள்ளிச் செல்லவோ…

பெண் : அன்றாடம் சேர்வது…
மன்னா மன்னா உன் பொன்மடி…

ஆண் : எந்நாளும் இன்பமே
நீயே நீயே என் பைங்கிளி…
பூ மங்கையே பொங்கிடும் கங்கையே…

பெண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் பார்வையில்…

ஆண் : நில்லாமலே நீ போவதேன்…
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்…

பெண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் வாசலில்…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் பார்வையில்…


Notes : Nilatha Vennila Song Lyrics in Tamil. This Song from Aanazhagan (1995). Song Lyrics penned by Vaali. நில்லாத வெண்ணிலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading