கொட்டிக் கிடக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாகே.எஸ். சித்ராஇளையராஜாதீர்த்தக்கரையினிலே

Kotti Kidakkuthu Song Lyrics in Tamil

BGM

பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே… ஹோய்…
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே… ஹோய்…

பெண் : எங்கெங்கிலும் வஞ்சமோ வஞ்சம்…
அன்பதற்க்கு பஞ்சமோ பஞ்சம்…
எங்களுக்குப் பஞ்சமும் இல்லே சாமி… ஹா ஹா…

பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே… ஹோய்…
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : பூமிக்குள் ஊறிடும் நீரதுதான்…
ஆறாக ஊரெங்கும் ஓடுவது…
ஆறோடும் பாதையை யாரு இங்கே…
நேராக சீராக ஆக்கியது…

பெண் : என்னதென்றும் உன்னதென்றும் பேதங்கள்தான் ஏனோ…
என்ன இது என்ன இது கேவலங்கள்தானோ…

பெண் : ஆறோடும் நீரது நேராகப் பின் செல்லுமா… ஹோய்…
ஊறிய ஊற்றுக்குள் தானாகத்தான் போகுமா… ஹோய்…

பெண் : அன்பு நெஞ்சம் பூமிக்கும் உண்டு…
அந்த நெஞ்சம் நீருக்கும் உண்டு…
இங்கு அது யாருக்கு உண்டு கூறடியோ… ஹா ஹா…

பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே… ஹோய்…
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே…

BGM

பெண் : மண்ணில் கிடக்கின்ற கல்லு ஒன்று…
வைரக்கல் என்றதை யார் சொன்னது…
கண்ணில் கிடைப்பதை சொந்தம் கொள்ளும்…
சின்ன புத்தி அதை யார் தந்தது…

பெண் : சொல்லுவதும் கேட்பதுவும் நாமல்லவோ மானே…
அள்ளுவதும் கொள்ளுவதும் நம்பிக்கையால் தானே…
நித்தமும் சுற்றிச் சுழன்றிடும் மண் தனிலே… ஹோய்…
ஒட்டி உழன்றிடும் மண் புழு மானிடமே… ஹோய்…

பெண் : என்றென்றைக்கும் சொந்தமோ சொந்தம்…
ஏழைக்குள்ள இன்பமோ இன்பம்…
வானம் மேகம் காற்று மட்டும்தான் பாரடியோ… ஹா ஹா…

பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே… ஹோய்…
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே… ஹோய்…

பெண் : எங்கெங்கிலும் வஞ்சமோ வஞ்சம்…
அன்பதற்க்கு பஞ்சமோ பஞ்சம்…
எங்களுக்குப் பஞ்சமும் இல்லே சாமி… ஹா ஹா…

பெண் : கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே… ஹோய்…
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே…

Notes : Kotti Kidakkuthu Song Lyrics in Tamil. This Song from Theertha Karaiyinile (1987). Song Lyrics penned by Ilaiyaraaja. கொட்டிக் கிடக்குது பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading