சித்திரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ் & வசந்தாசங்கர் கணேஷ்நெஞ்சிலே துணிவிருந்தால் (1981)

Chitrame Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்…
உந்தன் மன்னவன்தான்…
இந்த பொன்மானையே…
ஒரு பூந்தென்றலாய் தொடவோ…

ஆண் : சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்…
உந்தன் மன்னவன்தான்…
இந்த பொன்மானையே…
ஒரு பூந்தென்றலாய் தொடவோ… ஒ…

—BGM—

ஆண் : இடை கொண்ட அன்னம் ஒன்று…
எழிலோடு வந்தாட…
நடை சிந்தும் நளினம் கண்டு…
மனம் ஒன்று போராட…

ஆண் : இடை கொண்ட அன்னம் ஒன்று…
எழிலோடு வந்தாட…
நடை சிந்தும் நளினம் கண்டு…
மனம் ஒன்று போராட…

ஆண் : படை கொண்ட மன்னன் கூட…
பசி கொண்டு தள்ளாட…
பாவை உந்தன் பருவம் இன்று…
பதில் சொல்லுமோ…

ஆண் : சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்…
உந்தன் மன்னவன்தான்…
இந்த பொன்மானையே…
ஒரு பூந்தென்றலாய் தொடவோ… ஒ…

—BGM—

ஆண் : கடல் போல பொங்கும் உள்ளம்…
கரை காணும் நேரத்தில்…
உடல் மீறி பொங்கும் இன்பம்…
அலை மோதும் கோலத்தில்…

ஆண் : கடல் போல பொங்கும் உள்ளம்…
கரை காணும் நேரத்தில்…
உடல் மீறி பொங்கும் இன்பம்…
அலை மோதும் கோலத்தில்…

ஆண் : மடல் கொண்டு இளமை எழுதும்…
கவி ஒன்று மலராதோ…
விடை சொல்ல விடியும் காலை…
வரும் அல்லவோ…

ஆண் : சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்…
உந்தன் மன்னவன்தான்…
இந்த பொன்மானையே…
ஒரு பூந்தென்றலாய் தொடவோ… ஒ…

ஆண் : சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…
சித்திரமே உன் விழிகள்…
கொத்து மலர் கணைகள்…


Notes : Chitrame Song Lyrics in Tamil. This Song from Nenjile Thunivirunthal (1981). Song Lyrics penned by Vairamuthu. சித்திரமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading