யாரோ யார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பி. கிருஷ்ணமூர்த்திஜேக்ஸ் பெஜாய்ஜேக்ஸ் பெஜாய்தாக்க தாக்க

Yaaro Yaar Ivan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யாரோ யார் இவன்…
யாரோ யார் இவன்…
தாயின் கருவிலே தானாய் உதித்தவன்…

ஆண் : வரமா வலியா இறைவன் சதியா…
ஜனனம் ஏது மரணம் ஏது…
இவை இரண்டும் ஒன்றாய் சேர்ந்த…
பிறவியோ இவன்…

ஆண் : யாரோ யார் இவன்…
யாரோ யார் இவன்…

—BGM—

ஆண் : எதர்க்கிவன் வந்தானோ…
இனி என்ன செய்வானோ…
இவனது விதியினை யார் அறிவார்…

ஆண் : இவன் விதி இதுவென்று…
அவன் விதி அதுவென்று…
படைத்தவன் அவன் விதி எவன் படைத்தான்…

ஆண் : பிறர் துயர் துடைத்திட பிறந்தவனோ…
இவன் துயர் துடைத்திட யார் எவனோ…

—BGM—

ஆண் : இறைவா இது யார் பிழையோ…
அறிவாய் இது உன் பிழையே…
உயிரின் வழியை உணர்வாய்…

ஆண் : யாரோ யார் இவன்…
யாரோ யார் இவன்…

—BGM—

ஆண் : ஓர் அறிவென்றாலும் ஆர் அறிவென்றாலும்…
அணைத்திட்ட பரம்பொருள் தாய் அல்லவா…
ஊர் பழி சொன்னாலும் வீண் பழி என்றாலும்…
தாயவள் அன்பினில் களங்கமுண்டா…

ஆண் : காலத்தின் கண்ணீரின் வலி இவளோ…
இவளது கண்ணீரின் விலை இவனோ…
இறைவா இவள் தாயில்லையா…
உனக்கும் ஒரு தாயில்லையா…
உயிரின் வழியை உணர்வாய்…

ஆண் : யாரோ யார் இவன்…
யாரோ யார் இவன்…
தாயின் கருவிலே தானாய் உதித்தவன்…

ஆண் : வரமா வலியா இறைவன் சதியா…
ஜனனம் ஏது மரணம் ஏது…
இவை இரண்டும் ஒன்றாய் சேர்ந்த…
பிறவியோ இவன்…

—BGM—


Notes : Yaaro Yaar Ivan Song Lyrics in Tamil. This Song from Thaakka Thaakka (2015). Song Lyrics penned by P. Krishnamoorthy. யாரோ யார் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading