யார் வீட்டில் ரோஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஇதய கோயில்

Yaar Veetil Roja Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ…
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ…

ஆண் : மேகம் தன்னை மேகம் மோதி…
மின்னல் மின்னுதோ… ஹோ…
மின்னல் இந்த நேரம்…
எந்தன் கண்ணில் மின்னுதோ…

ஆண் : ஒரு ராகம் புது ராகம்…
அதில் சோகம்தான் ஏனோ…

ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ…

—BGM—

ஆண் : ராகங்கள் நூறு அவள் கொடுத்தாள்…
கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்…

ஆண் : ஜீவன் அங்கே என்னைத் தேடும்…
பாடல் இங்கே காற்றில் ஓடும்…

ஆண் : காணாமல் கண்கள் நோகின்றதோ…
காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று…

ஆண் : ஓர் ஏழை வெண்புறா மேடையில்…
என் காதல் பெண்புறா வீதியில்…
பூங்காற்று போராடவே…
பூத்த பூவும் ஆற்றில் ஓடவே…

ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ…

—BGM—

ஆண் : வான் மேகம் மோதும் மழைதனிலே…
நான் பாடும் பாடல் நனைகிறதே…

ஆண் : பாடல் இங்கே நனைவதனாலே…
நனையும் வார்த்தை கரையுது இங்கே…

ஆண் : ஜென்மங்கள் யாவும் நீ வாழவே…
காதல் கொண்ட உள்ளம்…
காணும் அன்பின் இல்லம்…

ஆண் : ஓர் காற்றின் கைகளும் தீண்டுமோ…
என் காவல் எல்லையைத் தாண்டுமோ…
நியாயங்கள் வாய் மூடுமோ…
தெய்வமில்லை என்று போகுமோ…

ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ…

—BGM—

ஆண் : மேகம் தன்னை மேகம் மோதி…
மின்னல் மின்னுதோ… ஹோ…
மின்னல் இந்த நேரம்…
எந்தன் கண்ணில் மின்னுதோ…

—BGM—

ஆண் : ஒரு ராகம் புது ராகம்…
அதில் சோகம் தான் ஏனோ…

ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ…
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ…


Notes : Yaar Veetil Roja Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Mu Metha. யார் வீட்டில் ரோஜா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading