வான் போலே வண்ணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜாஇளையராஜாசலங்கை ஒலி

Vaan Pole Vannam Kondu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வான் போலே வண்ணம் கொண்டு…
வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…
வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…

பெண் : ஆஹா… வெண்ணிலா மின்னிடும்…
கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே…
பல விந்தைகள் செய்தவனே…

ஆண் : ஆஹஹா… வான் போலே வண்ணம் கொண்டு…
வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…

—BGM—

ஆண் : மண்ணைத் தின்று வளர்ந்தாயே…
துள்ளிக்கொண்டு திரிந்தாயே…

—BGM—

ஆண் : மண்ணைத் தின்று வளர்ந்தாயே…
துள்ளிக்கொண்டு திரிந்தாயே…

பெண் : அன்னையின்றிப் பிறந்தாயே…
பெண்களோடு அலைந்தாயே…
மோகனங்கள் பாடி வந்து…
மோக வலை விரித்தாயே…
மோகனங்கள் பாடி வந்து…
மோக வலை விரித்தாயே…

ஆண் : சேலைகளைத் திருடி…
அன்று செய்த லீலை பல கோடி…
பொன்னான காவியங்கள்…
போற்றிப் பாடும் காதல் மன்னா…

ஆண் : வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…

பெண் : ஆஹஹா… வான் போலே வண்ணம் கொண்டு…
வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…

—BGM—

பெண் : பெண்களுடை எடுத்தவனே…
தங்கக் குடை கொடுத்தவனே…

—BGM—

பெண் : பெண்களுடை எடுத்தவனே…
தங்கக் குடை கொடுத்தவனே…

ஆண் : ராச லீலை புரிந்தவனே…
ராஜ வேலை தெரிந்தவனே…
கீதையென்னும் சாரம் சொல்லி…
கீர்த்தியினை வளர்த்தாயே…
கீதையென்னும் சாரம் சொல்லி…
கீர்த்தியினை வளர்த்தாயே…

பெண் : கவிகள் உன்னை வடிக்க…
காலமெல்லாம் நிலைத்தாயே…
வானில் உந்தன் கானமெல்லாம்…
இன்றும் என்றும் வாழும் கண்ணா…
வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…

ஆண் : ஆஹஹா… வான் போலே வண்ணம் கொண்டு…
வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…

பெண் : ஆஹஹா… வெண்ணிலா மின்னிடும்…
கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே…
பல விந்தைகள் செய்தவனே…

ஆண் : ஆஹஹா… வெண்ணிலா மின்னிடும்…
கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே…
பல விந்தைகள் செய்தவனே…

பெண் : ஆஹஹா… வான் போலே வண்ணம் கொண்டு…
வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…


Notes : Vaan Pole Vannam Kondu Song Lyrics in Tamil. This Song from Salangai Oli (1983). Song Lyrics penned by Vairamuthu. வான் போலே வண்ணம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading