யார் வழியில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்தனுஷ்ராதன்சில நேரங்களில் சில மனிதர்கள்

Yaar Vazhiyil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யார் வழியில்…
யார் மொழியில்…
யார் துணையில்…
விடைகள் வந்து சேருமோ…

ஆண் : யார் விதியில்…
யார் சதியில்…
யார் மதியில்…
தடைகள் வந்து நேருமோ…

ஆண் : தீர்வுகள் இன்றியே…
பயணம்தான் நீளுமோ…
தொடர்ந்திடும் துன்பத்தை…
இதயம்தான் தாங்குமோ…

ஆண் : எத்திசை எமக்கென…
விடியல்தனை காட்டுமோ…
எவ்வழி நம்பிக்கை…
நம்மை வந்து சேருமோ…

குழு (பெண்கள்) : எதுவும் கடந்து போகும் என நினைத்தோம்…
யாவும் பொய்தானோ…
விதியே வென்று தீரும் என படித்தோம்…
யாவும் மெய்தானோ…

குழு (பெண்கள்) : யாரிடம் முறையிட…
யாருமில்லை விடையை சொல்லிட…

குழு (பெண்கள்) : யாரோ தொடர்ந்த வழக்கு…
விடியல்தனை தருமா நமக்கு…
பாவம் நமது இலக்கு…
நடை தளர்ந்து முடமாய் கிடக்கு…

ஆண் : முன்வினை என்பது…
பின்வினை தேடுமோ…
ஒருவழி பாதையில்…
வாழ்க்கைதான் ஓடுமோ…

ஆண் : காரணம் யாரென்று…
கடவுளை கேட்பதா…
காலத்தை கேட்பதா…
யார் இங்கு பேசுவார்…

ஆண் : ஆகாயம் போலத்தான்…
அடங்காத கேள்விகள்…
விடைதேட தேடத்தான்…
விரிசல்கள் நூறு…

ஆண் : பலநேரம் வாழ்க்கைக்கு…
பலியாகும் மானுடம்…
பறிபோன யாவையும்…
கிடைக்காது மீண்டும்…

—BGM—

ஆண் : நாளைகள் என்பது…
எதுவரையில் நீளுமோ…
நம்பிக்கை கீற்றுகள்…
அதுவரையில் வாழுமோ…

ஆண் : சிலந்தியின் கூடென…
சிந்தனைகள் யாவுமே…
சிக்கல்களில் ஆடுதே…
சிதறிதான் போகுதே…

ஆண் : எழுதாத நாடகம்…
இயக்குவது யாரிங்கே…
முடிவென்ன என்பதும்…
யார் சொல்வாரோ…

ஆண் : தெரியாத பாதையில்…
புரியாத தேடல்கள்…
எங்கெங்கோ போகுதே…
விடை இங்கு இல்லையே…

குழு (பெண்கள்) : எதுவும் கடந்து போகும் என நினைத்தோம்…
யாவும் பொய்தானோ…
விதியே வென்று தீரும் என படித்தோம்…
யாவும் மெய்தானோ…

குழு (பெண்கள்) : யாரிடம் முறையிட…
யாருமில்லை விடையை சொல்லிட…

குழு (பெண்கள்) : யாரோ தொடர்ந்த வழக்கு…
விடியல்தனை தருமா நமக்கு…
பாவம் நமது இலக்கு…
நடை தளர்ந்து முடமாய் கிடக்கு…

ஆண் : யார் வழியில்…
யார் மொழியில்…
யார் துணையில்…
விடைகள் வந்து சேருமோ…

ஆண் : யார் விதியில்…
யார் சதியில்…
யார் மதியில்…
தடைகள் வந்து நேருமோ…


Notes : Yaar Vazhiyil Song Lyrics in Tamil. This Song from Sila Nerangalil Sila Manidhargal (2022). Song Lyrics penned by Snehan. யார் வழியில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading