unakkaagave-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மாதேவன்சத்ய பிரகாஷ்ராதன்சில நேரங்களில் சில மனிதர்கள்

Unakkaagave Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிறு மேக கூடு திறக்கும் உனக்காகவே…
துளிர் தீண்ட காடு திறக்கும் உனக்காகவே…
சிறு மேக கூடு திறக்கும் உனக்காகவே…
துளிர் தீண்ட காடு திறக்கும் உனக்காகவே…

ஆண் : பேரொலியது கார் நிழலினை…
ஓர் நிலையிலும் நீக்க கேட்கவில்லை…
கார் எதிரிலே பார் அழைக்குது…
நீ வெறுத்திடும் நீயும் இன்றில்லை…

ஆண் : வேர் அழித்திடும் சேர் சகதியை…
தான் மறையாது நீக்க கேட்கவில்லை…
வாழ் என உனை வாழ்வழைக்குது…
நீ நினைத்திட நீளும் உன் எல்லை…

ஆண் : ஓர் விறல் ஓர் குரல்…
கேட்டிட தோன்றலாம்…
நாளை நம் பாதையில்…
மாற்றங்கள் காணலாம்…

ஆண் : சிறு மேக கூடு திறக்கும் உனக்காகவே…
துளிர் தீண்ட காடு திறக்கும் உனக்காகவே…

BGM

ஆண் : உன்னைத் தொடு மன்னித்திடு…
காயங்களும் மாறலாம்…
உன்னைத் தொடு நீ அழைத்திடு…
மனதின் மனமும் ஓங்கி எழலாம்…

ஆண் : தாழ்வென்ன தாழ்விது…
தாள் நீக்கி மீண்டெழு…
வாழ்வென்ன வாழ்விது…
நீ இன்றி ஏதிது…

ஆண் : காளான்களும் குடையாகுதே…
புழு ஒன்று போகும் பாதையில்…
பேரன்பிலே தீரா நதி உனக்காகவே…

ஆண் : பேரொலியது கார் நிழலினை…
ஓர் நிலையிலும் நீக்க கேட்கவில்லை…
கார் எதிரிலே பார் அழைக்குது…
நீ வெறுத்திடும் நீயும் இன்றில்லை…

ஆண் : வேர் அழித்திடும் சேர் சகதியை…
தான் மறையது நீக்க கேட்கவில்லை…
வாழ் என உனை வாழ்வழைக்குது…
நீ நினைத்திட நீளும் உன் எல்லை…

BGM

ஆண் : உனக்காகவே… ஏ ஏ… உனக்காகவே…


Notes : Unakkaagave Song Lyrics in Tamil. This Song from Sila Nerangalil Sila Manidhargal (2021). Song Lyrics penned by Maathevan. உனக்காகவே பாடல் வரிகள்.