விழி பேசும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர். ஜே. விஜய்சின்மயி & ஹரிசரண்ராதன்சில நேரங்களில் சில மனிதர்கள்

Vizhi Pesum Song Lyrics in Tamil


—BGM—

பெண் : விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ…
புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ…
தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ…
நான் உன்னை சேரவே வானவில் கோலமோ…
கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ…
ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ…

—BGM—

ஆண் : அழகே நீ இளைப்பாற…
ஒரு மேகம் நான் பிடித்திடவா…
தினமும் கதை பேச…
நிலவை நான் வாங்கவா…

ஆண் : நீ குளித்து தலை காய…
புயல் காற்றை நான் அழைத்திடவா…
நித்திரையில் உன்னை காக்க…
சூரியனை தள்ளவா…

பெண் : மௌனமாக நானும் பேச…
உன் பதில் வருமா…
வெட்கத்தில் உன் மார்பில் சாய…
இடம் அது தருமா…

பெண் : கைகள் கோர்த்து காதல் செய்ய…
வாழ்வின் வரமா…
கனவில் வாழும் இந்த வாழ்க்கை…
வாழ்ந்தால் சுகமா… ஆஆஅ…

—BGM—

பெண் : களைப்பாக வரும் வேளை…
உன்னை பார்க்க வாசல் வரவா…
மகிழுந்தின் ஒலி கேட்க…
நெற்றி பொட்டு சூடவா…

பெண் : நீ உறங்கும் என் மடியை…
தலையணையாய் நான் மாறிடவா…
நள்ளிரவில் நீ சிணுங்க…
தாலாட்டும் பாடவா…

ஆண் : தாயை போல தாரம் நீயும்…
தேவதை உறவா…
சேர்ந்து வாழும் நாட்கள் எல்லாம்…
காதலின் பதிவா…

ஆண் : உன்னை அன்பில் மிஞ்சும் ஒருத்தி…
பூமியில் வருவா…
தந்தாய் என்று என்னை சொல்லி…
முத்தமும் தருவா… ஆஆஆஅ…

ஆண் : விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ…
புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ…

பெண் : தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ…

ஆண் : நான் உன்னை சேரவே வானவில் கோலமோ…

ஆண் & பெண் : கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ…
ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ…

—BGM—


Notes : Vizhi Pesum Song Lyrics in Tamil. This Song from Sila Nerangalil Sila Manidhargal (2022). Song Lyrics penned by RJ Vijay. விழி பேசும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading