என்ன சத்தம் இந்த நேரம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபுன்னகை மன்னன்

Enna Satham Intha Neram Song Lyrics in Tamil


ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா… ஆ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…

BGM

ஆண் : கன்னத்தில் முத்தத்தின் ஈரம்…
அது காயவில்லையே…
கண்களில் ஏன் அந்த கண்ணீர்…
அது யாராலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கன்னியின் கழுத்தை பார்த்தால்…
மணமாகவில்லையே…
காதலன் மடியில் பூத்தாள்…
ஒரு பூ போலே…

ஆண் : மன்னவனே உன் விழியால்…
பெண் விழியை மூடு…
ஆதரவாய் சாய்ந்து விட்டால்…
ஆரிராரோ பாடு…
ஆரிராரோ இவர் யார் எவரோ…
பதில் சொல்வார் யாரோ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா… ஆ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…

BGM

ஆண் : கூந்தலில் நுழைந்த கைகள்…
ஒரு கோலம் போடுதோ…
தன்னிலை மறந்த பெண்மை…
அதை தாங்காதோ…

ஆண் : உதட்டில் துடிக்கும் வார்த்தை…
அது உலர்ந்து போனதோ…
உள்ளங்கள் துடிக்கும் ஓசை…
இசை ஆகாதோ…

ஆண் : மங்கையிவள் வாய் திறந்தால்…
மல்லிகை பூ வாசம்…
ஓடையெல்லாம் பெண் பெயரை…
உச்சரித்தே பேசும்…
யார் இவர்கள் இரு பூங்குயில்கள்…
இளம் காதல் மான்கள்…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா… ஆ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…


Notes : Enna Satham Intha Neram Song Lyrics in Tamil. This Song from Punnagai Mannan (1986). Song Lyrics penned by Vairamuthu. என்ன சத்தம் இந்த நேரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading