ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராஇளையராஜாபுன்னகை மன்னன்

Yedhedho Ennam Valarthen Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…

பெண் : நீதானே புன்னகை மன்னன்…
உன் ராணி நானே…
பண்பாடும் பாடகன் நீயே…
உன் ராகம் நானே…

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…

BGM

பெண் : சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்…
உன்னை பார்த்ததால்தானே உயிர் வாழ்கிறேன்…
தூக்கம் விழிக்கிறேன்…
பூக்கள் வளர்க்கிறேன்…

பெண் : சில பூக்கள்தானே மலர்கின்றது…
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது…
பதில் என்ன கூறு…
பூவும் நானும் வேறு…

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…

BGM

பெண் : குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா…
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்கவா…
நீயே அணைக்க வா…
தீயை அணைக்க வா…

பெண் : நீ பார்க்கும் போது பணியாகிறேன்…
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்…
எது வந்த போதும் இந்த அன்பு போதும்…

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…

பெண் : நீதானே புன்னகை மன்னன்…
உன் ராணி நானே…
பண்பாடும் பாடகன் நீயே…
உன் ராகம் நானே…

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…


Notes : Yedhedho Ennam Valarthen Song Lyrics in Tamil. This Song from Punnagai Mannan (1986). Song Lyrics penned by Vairamuthu. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top