சிங்களத்து சின்னக் குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபுன்னகை மன்னன்

Singalathu Chinnakuyile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஜிங்கள ஜிங்கள ஜிங்கள…
ஜிங்கள ஜிங்கள ஜிங்கள ஜிங்கள…

பெண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா… ஹோ…

ஆண் : சிங்களத்து சின்னக் குயிலே…
எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மயிலே…
சிங்களத்து சின்னக் குயிலே…
எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மயிலே…

ஆண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா… ஹோ…

—BGM—

ஆண் : அன்பே நீ இன்றி அலைகள் ஆடாது…
கண்கள் சாய்ந்தாலும் இமைகள் மூடாது…
பூவே நீ இன்றி பொழுதும் போகாது…
காதல் இல்லாமல் கவிதை வாழாது…

பெண் : ஆதரிக்க நல்ல இளைஞன்…
மனம் விட்டு காதலிக்க நல்ல கவிஞன்…

ஆண் : காதலிக்க வந்த கலைஞன்…
இவன் என்றும் தாவணிக்கு நல்ல தலைவன்…

பெண் : தடை ஏது தலைவா…
இடை மேலே உடை நீயே…
பூ மஞ்சம் நீ போட வா…

பெண் : எனக்கென்ன சிங்களத்து சின்னக் குயில் நான்…
உனக்கொரு மந்திரத்த சொல்லும் மயில் நான்…
சிங்களத்து சின்னக் குயில் நான்…
உனக்கொரு மந்திரத்த சொல்லும் மயில் நான்…

ஆண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா… ஹோ…

—BGM—

பெண் : நிலவே நான் தானா நிஜமா வீண் கேலி…
உந்தன் மடி தானே நிலவின் நாற்காலி…
ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி…
காமன் பூச்சூடும் கலையில் நீ ஞானி…

ஆண் : ஆத்திரத்தில் தொட்டு வைக்கிறேன்…
இருக்கட்டும் ராத்திரிக்கு விட்டு வைக்கிறேன்…

பெண் : விட்டு விடு தத்தளிக்கிறேன்…
என்னை விட்டு எட்டி நில்லு எச்சரிக்கிறேன்…

ஆண் : பிடிவாதம் தகுமா…
கொடி ஒன்று கனி ரெண்டு…
வாங்காமல் தாங்காதம்மா…

ஆண் : சிங்களத்து சின்னக் குயிலே…
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே…
சிங்களத்து சின்னக் குயிலே…
எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே…

பெண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
கன்னம் வலிக்கும் கிள்ளாதே கல்லுளி மங்கா… ஹோ…

ஆண் : ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா… ஹோ…


Notes : Singalathu Chinnakuyile Song Lyrics in Tamil. This Song from Punnagai Mannan (1986). Song Lyrics penned by Vairamuthu. சிங்களத்து சின்னக் குயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading