யாா் இந்த சாலை ஓரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி.வி. பிரகாஷ் குமார் & சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமாா்தலைவா

Yaar Indha Saalai Oram Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது…
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது…

பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது…
இன்று பேசாமல் கண்கள் பேசுது…

ஆண் : நகராமல் இந்த நொடி நீள…
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே…

பெண் : குளிராலும் கொஞ்சம் அனலாலும்…
இந்த நெருக்கம்தான் கொல்லுதே…

ஆண் : எந்தன் நாளானது இன்று வேரானது…
வண்ணம் நூறானது வானிலே…

—BGM—

ஆண் : யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது…
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது…

—BGM—

ஆண் : தீர தீர ஆசையாவும் பேசலாம்…
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்…

பெண் : என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்…
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்…

ஆண் : என்னாகிறேன் என்று ஏதாகிறேன்…
பெண் : எதிா் காற்றிலே சாயும் குடையாகிறேன்…

ஆண் : எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது…
அது பறந்தோடுது வானிலே…

—BGM—

பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது…
இன்று பேசாமல் கண்கள் பேசுது…

—BGM—

ஆண் : மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மழையிலே…
அது மழையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே…

பெண் : வைரம் போல பெண்ணின் மனது உலகிலே…
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே…

ஆண் : கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி…
பெண் : என் பாதையில் இன்று உன் காலடி…

ஆண் : நேற்று நான் பாா்ப்பதும்…
இன்று நீ பாா்ப்பதும்…
நெஞ்சம் எதிா் பாா்ப்பதும் ஏனடி…

—BGM—

ஆண் : யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது…
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது…

பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது…
இன்று பேசாமல் கண்கள் பேசுது…

ஆண் : நகராமல் இந்த நொடி நீள…
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே…

பெண் : குளிராலும் கொஞ்சம் அனலாலும்…
இந்த நெருக்கம்தான் கொல்லுதே…

ஆண் : எந்தன் நாளானது இன்று வேரானது…
வண்ணம் நூறானது வானிலே…

—BGM—


Notes : Yaar Indha Saalai Oram Song Lyrics in Tamil. This Song from Thalaivaa (2013). Song Lyrics penned by Na. Muthukumar. யாா் இந்த சாலை ஓரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading