வெட்டி வேரு வாசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாமுதல் மரியாதை

Vetti Veru Vasam Song Lyrics in Tamil


பெண் : வெட்டி வேரு வாசம்…
வெடல புள்ள நேசம்…
வெட்டி வேரு வாசம்…
வெடல புள்ள நேசம்…
பூவுக்கு வாசம் உண்டு…
பூமிக்கும் வாசம் உண்டு…

ஆண் : வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே…
பெண் : வெட்டி வேரு வாசம்…
வெடல புள்ள நேசம்…

BGM

ஆண் : பச்ச கிளியோ ஓஹோ… போட்டுக்கிருச்சு…
இச்ச கிளியோ ஓஹோ… ஒத்துகிருச்சு…

BGM

பெண் : பச்ச நெருப்பு ஒத்திகிருச்சு…
பச்ச மனசு பத்திகிருச்சு…

ஆண் : கைய கட்டி நிக்க சொன்னா…
காட்டு வெள்ளம் நிக்காது…

பெண் : காதல் மட்டும் கூடாதுன்னா…
பூமி இங்கு சுத்தாது…

ஆண் : சாமி கிட்ட கேளு…
யாரு போட்ட கோடு…

பெண் : பஞ்சுக்குள்ள தீய வச்சு…
சுத்தி வச்சவக யாரு…

ஆண் : வெட்டி வேரு வாசம்…
வெடல புள்ள நேசம்…
வெட்டி வேரு வாசம்…
வெடல புள்ள நேசம்…

பெண் : பூவுக்கு வாசம் உண்டு…
பூமிக்கும் வாசம் உண்டு…

ஆண் : வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே…

பெண் : வெட்டி வேரு வாசம்…
வெடல புள்ள நேசம்…

BGM

பெண் : உன்ன கண்டு நான் சொக்கி நிக்குறேன்…
கண்ணுக்குள்ள நான் தண்ணி வெக்கிறேன்…

BGM

ஆண் : சொல்லாமதான் தத்தளிக்கிறேன்…
தாளாமதான் தள்ளி நிக்கிறேன்…

பெண் : பாசம் உள்ள பந்தம் இது…
பாவமுன்னு சொல்லாது…

ஆண் : குருவி கட்டும் கூட்டுக்குள்ள…
குண்டு வெக்க கூடாது…

பெண் : புத்தி கெட்ட தேசம்…
பொடி வச்சு பேசும்…

ஆண் : சாதி மத பேதம் எல்லாம்…
முன்னவங்க செஞ்ச மோசம்…

பெண் : வெட்டி வேரு வாசம்…
வெடல புள்ள நேசம்…
வெட்டி வேரு வாசம்…
வெடல புள்ள நேசம்…
பூவுக்கு வாசம் உண்டு…
பூமிக்கும் வாசம் உண்டு…

ஆண் : வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே…

பெண் : வெட்டி வேரு வாசம்…
ஆண் : வெடல புள்ள நேசம்…


Notes : Vetti Veru Vasam Song Lyrics in Tamil. This Song from Muthal Mariyathai (1985). Song Lyrics penned by Vairamuthu. வெட்டி வேரு வாசம் பாடல் வரிகள்.


Scroll to Top