மச்சான பார்த்தீங்களா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். ஜானகிஇளையராஜாஅன்னக்கிளி

Machana Patheengala Song Lyrics in Tamil


பெண் : லாலிலாலி லாலோ…
லாலிலாலி லாலோ…
லாலிலாலி லாலோ…
லாலிலாலி லாலோ… ஓ…
என் மச்சான… மச்சான… ஆ…

பெண் : மச்சான பார்த்தீங்களா…
மலை வாழை தோப்புக்குள்ளே…
மச்சான பார்த்தீங்களா…
மலை வாழை தோப்புக்குள்ளே…

பெண் : குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு…
வந்தாரா காணலியே…
அவர் வந்தாரா காணலியே…

BGM

பெண் : வெள்ளிச்சரம் புன்னகையில்…
நான் அள்ளி வச்சேன் காணலியே…
நான் அள்ளி வச்சேன் காணலியே…

பெண் : ஊர்கோல மேகங்களே…
நீங்க ஒரு நாழி நில்லுங்களேன்…
மயிலாடும் கட்டில் தனியாக அவரை…
பார்த்தாதான் சொல்லுங்களேன்…
என் ஏக்கத்தை சொல்லுங்களேன்…

பெண் : மச்சான பார்த்தீங்களா…
மலை வாழை தோப்புக்குள்ளே…

BGM

பெண் : பச்சை புள்ளை போல் அவர் பார்த்து நிக்க…
இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க…
பச்சை புள்ளை போல் அவர் பார்த்து நிக்க…
இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க…

பெண் : அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட…
கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள…
நெஞ்சோடு அள்ள… நெஞ்சோடு அள்ள…

பெண் : கஸ்தூரி கலை மான்களே…
அவர கண்டாக்கா சொல்லுங்களேன்…
ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர…
பார்த்தாக்கா சொல்லுங்களேன்…
என் ஏக்கத்தை சொல்லுங்களேன்…

பெண் : மச்சான பார்த்தீங்களா…
மலை வாழை தோப்புக்குள்ளே…

BGM

பெண் : கல்யாணம் பேசி கண்டாங்கிச் சேலை…
தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன்…

BGM

பெண் : கல்யாணம் பேசி கண்டாங்கிச் சேலை…
தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன்…

பெண் : புது மஞ்சள் பூசி பொன் மேடை இட்டு…
மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக…
மாப்பிள்ளை ஆக… மாப்பிள்ளை ஆக…

பெண் : தலை வாழை இலை போடுங்க…
ஊர விருந்துக்கு வர சொல்லுங்க…
தலை வாழை இலை போடுங்க…
ஊர விருந்துக்கு வர சொல்லுங்க…

பெண் : பூ போட்ட மஞ்சம்…
ஆடட்டும் கொஞ்சம்…
மனசார வாழ்த்துங்களேன்…
எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்…
மனசார வாழ்த்துங்களேன்…
எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்…

BGM


Notes : Machana Patheengala Song Lyrics in Tamil. This Song from Annakili (1976). Song Lyrics penned by Panchu Arunachalam. மச்சான பார்த்தீங்களா பாடல் வரிகள்.


Scroll to Top