பூங்காற்று திரும்புமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாமுதல் மரியாதை

Poongatru Thirumbuma Song Lyrics in Tamil


ஆண் : பூங்காற்று திரும்புமா…
என் பாட்ட விரும்புமா…
பாராட்ட மடியில் வச்சுப் தாலாட்ட…
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா…

ஆண் : பூங்காற்று திரும்புமா…
என் பாட்ட விரும்புமா…

பெண் : ராசாவே வருத்தமா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ராசாவே வருத்தமா…
ஆகாயம் சுருங்குமா…
ஏங்காதே…

பெண் : அத ஒலகம் தாங்காதே…
அடுக்குமா…
சூரியன் கருக்குமா…

BGM

ஆண் : என்ன சொல்லுவேன்…
என்னுள்ளம் தாங்கல…
மெத்த வாங்கினேன்…
தூக்கத்த வாங்கல…

பெண் : இந்த வேதனை…
யாருக்குத்தான் இல்ல…
ஒன்ன மீறவே…
ஊருக்குள் ஆளில்ல…

ஆண் : ஏதோ என்பாட்டுக்கு…
நான் பாட்டுப் பாடி…
சொல்லாத சோகத்த சொன்னேனடி…

பெண் : சொக ராகம் சோகம்தானே…
சொக ராகம் சோகம்தானே…

ஆண் : யாரது போறது…

பெண் : குயில் பாடலாம்…
தன் முகம் காட்டுமா…

BGM

ஆண் : பூங்காற்று திரும்புமா…
என் பாட்ட விரும்புமா…
பாராட்ட மடியில் வச்சுப் தாலாட்ட…
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா…

BGM

ஆண் : உள்ள அழுகுறேன்…
வெளிய சிரிக்கிறேன்…
நல்ல வேஷம்தான்…
வெளுத்து வாங்குறேன்…

பெண் : உங்க வேஷம்தான்…
கொஞ்சம் மாறனும்…
எங்க சாமிக்கு…
மகுடம் ஏறனும்…

ஆண் : மானே என் நெஞ்சுக்கு…
பால் வார்த்த தேனே…
முன்னே என் பார்வைக்கு…
வா வா பெண்ணே…

பெண் : எசப் பாட்டு படிச்சேன் நானே…
எசப் பாட்டு படிச்சேன் நானே…

ஆண் : பூங்குயில் யாரது…

பெண் : கொஞ்சம் பாருங்க…
பெண் குயில் நானுங்க…

BGM

ஆண் : அடி நீதானா அந்தக் குயில்…
யார் வீட்டு சொந்தக் குயில்…
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி…
பறந்ததே ஒலகமே மறந்ததே…

பெண் : நான்தானே அந்தக் குயில்…
தானாக வந்தக் குயில்…
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி…
பறந்ததா ஒலகந்தான் மறந்ததா…


Notes : Poongatru Thirumbuma Song Lyrics in Tamil. This Song from Muthal Mariyathai (1985). Song Lyrics penned by Vairamuthu. பூங்காற்று திரும்புமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading