அந்த நிலாவதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஇளையராஜா & கே.எஸ். சித்ராஇளையராஜாமுதல் மரியாதை

Antha Nilava Than Song Lyrics in Tamil

பெண் : அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாவுக்காக…

BGM

பெண் : அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாவுக்காக…
அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாவுக்காக…

ஆண் : எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்…
பெண் : கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்…

ஆண் : எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்…
பெண் : கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்…

ஆண் : அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாத்திக்காக…

BGM

பெண் : மல்லு வேட்டி கட்டி இருக்கு…
அது மேல மஞ்சள் என்ன ஒட்டி இருக்கு…

ஆண் : முத்தழகி கட்டி புடிச்சி…
முத்தம் கொடுக்க மஞ்ச வந்து ஒட்டிகிடுச்சு…

பெண் : மார்கழி மாசம் பார்த்து…
மாருல குளிராச்சு…

ஆண் : ஹ்ம்ம்… ஏதுடா வம்பா போச்சு…
ரவுக்கையும் கிடையாது…

பெண் : சக்கம்பட்டி சேலை கட்டி…
பூத்திருக்கு பூஞ்சோலை…

ஆண் : பூவு ஒன்னு கண்ணடிச்சா…
வண்டு வரும் பின்னால…

பெண் : எக்கு தப்பு வேண்டாம்… ஹ்ம்ம்… ம்ம்ம்…

ஆண் : அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாத்திக்காக…

பெண் : எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்…
ஆண் : கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்…

பெண் : எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்…
ஆண் : கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்…

பெண் : அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
ஆண் : என் ராசாத்திக்காக…

BGM

ஆண் : ரத்தினமே முத்தம் வைக்கவா…
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா…

பெண் : வெட்கத்தையும் பொத்தி வைக்கவா…
அதுக்காக மந்தியில பந்தி வைக்கவா…

ஆண் : ஓடிவா ஓடை பக்கம்…
ஒளியலாம் மெதுவாக…

பெண் : அதுக்குள்ள வேணாமுங்க…
ஆளுக வருவாக…

ஆண் : காத்தடிச்சா தாங்காதடி…
மல்லிகை பூ மாராப்பு…

பெண் : கையிருக்கு காவலுக்கு…
வேணாமுங்க வீராப்பு…

ஆண் : அடி போடி புள்ளை…
எல்லாம் டூப்பு…

பெண் : அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாவுக்காக…
அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாவுக்காக…

ஆண் : எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்…
பெண் : கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்…

ஆண் : எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்குறேன்…
பெண் : கண்ணை மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்…

ஆண் : அந்த நிலாவதான் நான் கையில புடிச்சேன்…
என் ராசாத்திக்காக…

Notes : Antha Nilava Than Song Lyrics in Tamil. This Song from Muthal Mariyathai (1985). Song Lyrics penned by Vairamuthu. அந்த நிலாவதான் பாடல் வரிகள்.

Scroll to Top