ஓங்கார ரூபத்தில் உருவானவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காமகொடியன்வாணி ஜெயராம்எம்.எஸ்.விஸ்வநாதன்வெற்றி விநாயகர்

Ongaara Roobathil Uruvaanavan Song Lyrics in Tamil


பெண் : என்னை நினைந்தடிமை…
கொண்டென் இடர்கெடுத்து…
தன்னை நினையத் தருகின்றான்…
புன்னை விரசுமகிழ் சோலை…

பெண் : வியன்நாரை யூர்முக்கண் அரசு மகிழ்…
அத்தி முகத்தான்…
வியன்நாரை யூர்முக்கண் அரசுமகிழ்…
அத்தி முகத்தான்…

BGM

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்…
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்…

BGM

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்…
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்…

பெண் : நீங்காத ஞானத்தை தருவான் அவன்…
தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன்…
நீங்காத ஞானத்தை தருவான் அவன்…
தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன்…

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்…
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்…

BGM

பெண் : பால கணபதி தன்னை…
சீலம் அருளுக என்று…
நாம் போற்ற வழிக் காட்டுவான்…

பெண் : வீர கணபதி முன்பு…
யாரும் வணங்கிட வந்து…
ரட்சித்து கணை தீட்டுவான்…

BGM

பெண் : தருண கணபதி இன்று…
வருக விரைவுடன் என்று…
ஓர் சொல்லில் ஒளிக் கூட்டுவான்…

பெண் : துவாஜ கணபதி இங்கு…
மடமை விலகிட வந்து…
நூல் தந்து புகழ் சூட்டுவான்…

பெண் : ஐந்து கரமாட ஆனை முகமாட…
அருள் தரும் கரி முகனே…
நாவற்பழம் கொண்டு மோதகம் ஏந்தி…
நலன் தரும் சிவன் மகனே…

பெண் : முழு முதலே பரம் பொருளே…
தமிழ் தரும் அமுதே…

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்…
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்…

BGM

பெண் : சக்தி கணபதி…
செல்வ லட்சுமி கணபதி…
ஞான க்ஷிப்ர கணபதியும் நீயே…

BGM

பெண் : பக்த கணபதி…
வெல்லும் விக்ன கணபதி…
நெடிய புவன கணபதியும் நீயே…

BGM

பெண்: உச்சிட்ட கணபதி…
சிங்க கணபதி…
ஊர்த்துவ கணபதியும் நீயே…

BGM

பெண் : மஹா கணபதி…
எங்கள் ஹேரம்ப கணபதி…
நிருத்த கணபதியும் நீயே…

BGM

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்…
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்…
நீங்காத ஞானத்தை தருவான் அவன்…
தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன்…

பெண் : ஓங்கார ரூபத்தில் உருவானவன்…
அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்…


Notes : Ongaara Roobathil Uruvaanavan Song Lyrics in Tamil. This Song from Vetri Vinayagar (1996). Song Lyrics penned by Kamakodiyan. ஓங்கார ரூபத்தில் உருவானவன் பாடல் வரிகள்.


Scroll to Top