முரண்டு பிடிக்காத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்தேவாதேவாகோட்டை மாரியம்மன்

Murandu pudikkatha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முரண்டு பிடிக்காத…
முண்டகக்கண்ணி அம்மா…
மொறைச்சு பாக்காத…
பாளையத்து அம்மா… யம்மா…

ஆண் : கண்ண கண்ண உருட்டாத…
கருமாரி அம்மா…
கத்திய நீ காட்டாத…
காளிதேவி அம்மா…

ஆண் : அவ ஆக்கி வச்ச சோத்த…
நீ மூக்கு முட்ட புடிச்ச…
அவ ஊத்தி வச்ச கூழை…
உன் நாக்கு ருசிக்க குடிச்ச…

ஆண் : அடி சங்கரியே பைரவியே…
பட்டுனு வரத்தான் எக்குறியே…
பாரேன்டி பாரேன்…
அவ தவிப்பத…
மானம் மாற கொஞ்சம் மாற…
நீ கொதிப்பத…

ஆண் : முரண்டு பிடிக்காத…
முண்டகக்கண்ணி அம்மா…
மொறைச்சு பாக்காத…
பாளையத்து அம்மா…

ஆண் : கண்ண கண்ண உருட்டாத…
கருமாரி அம்மா…
கத்திய நீ காட்டாத…
காளிதேவி அம்மா…

—BGM—

ஆண் : வேப்பில்லைய இடுப்புல சுத்தி…
எங்க இடுப்ப சுத்தி…
வேண்டி வேண்டி கோவிலை சுத்தி…
உன் கோவில சுத்தி…
கன்னத்துல அழகுவேல் குத்தி…
அம்மா அழகு குத்தி…

ஆண் : பால் குடங்கள் எடுத்த…
அந்த பாலகி முகத்தை…
பாரேன் பாரேன் யம்மாடி…

ஆண் : முட்டை பாலும் உனக்கு தந்தா…
சுட்ட மீனும் படையல் வச்சா…
கட்டு கழுத்து தாளிய நீ…
காவு கேட்டு நிக்குறியே…

ஆண் : யம்மா… பத்தினிங்க விரதத்துக்கு…
சக்தி ஒன்னு இருக்குதுனா…
பெத்தவளே மனம் இறங்கு…
பாசத்துக்குள் நீ அடங்கு…

ஆண் : அம்மா கடல் நீயே கொதிச்சிபுட்டா…
சூடாத்த நீரேது…
காளி நீ மீனாட்சியா மாறம்மா…

ஆண் : அம்மா கற்பூர தீபமேந்தி…
கைவிளக்கு போட்ட அந்த…
கற்பரசி வாழ்வை எண்ணி பாரம்மா…

ஆண் : அடி பெண்ணினம்தான்…
அது என்றும் உன்னினம்தான்…
வேண்டுவதும் உன்னிடம்தான்…
அடி சத்தியம் பண்ணு சத்தியம் பண்ணு…
பக்தரை காக்க என்னிடம் வந்து…
சத்தியம் பண்ணு… யம்மா…

ஆண் : முரண்டு பிடிக்காத…
முண்டகக்கண்ணி அம்மா…
மொறைச்சு பாக்காத…
பாளையத்து அம்மா… யம்மா…

ஆண் : கண்ண கண்ண உருட்டாத…
கருமாரி அம்மா…
கத்திய நீ காட்டாத…
காளிதேவி அம்மா…

—BGM—

ஆண் : கொம்பு மஞ்சள் அரைச்சு எடுத்து…
அம்மா அரைச்சு எடுத்து…
பூசி பூசி குளிக்கவும் வச்சு…
உன்ன குளிக்க வச்சு…

ஆண் : உச்சி மல்லி மாலையும் கட்டி…
உன் கழுத்தில் போட்டு…
கும்பிட்டவ வாழ்வை காக்க…
வாடி வாடி வாடி வாடி வாடியம்மா…

ஆண் : பூப்பதையும் காய்ப்பதையும்…
காப்பவளே அம்மா நீ…
காப்பவளே கொலை செஞ்சா…
கடவுளும் பொய்யாகி… அம்மா…

ஆண் : குங்குமத்தை கொடுத்த கையால்…
மங்கலத்தை பறிக்கலாமா…
கொலைவிழி அம்மா நீ…
கோரபலி கேக்கலாமா…

ஆண் : அம்மா புருஷன் வரம் கேட்டு இங்கே…
ஒரு காலில் தவம் இருந்த…
மாங்காட்டு காமாட்சி வாடியம்மா…

ஆண் : அம்மா குடிசை முதல் மாடி வரை…
குடும்பத்து பெண்களுக்கு…
தாலியில்லா வாழ்க்கை…
இங்கே கேளியம்மா…

ஆண் : அடி வந்துவிடு…
கோபம் விட்டு வந்துவிடு…
பூவும் போட்டும் தந்துவிடு…
அடி வந்திடு வந்திடு…
நம்பிடும் பக்தரை காத்திட்ட…
இங்கே வந்திடம்மா வந்திடம்மா…

ஆண் : முரண்டு பிடிக்காத…
முண்டகக்கண்ணி அம்மா…
மொறைச்சு பாக்காத…
பாளையத்து அம்மா… யம்மா…

ஆண் : கண்ண கண்ண உருட்டாத…
கருமாரி அம்மா…
கத்திய நீ காட்டாத…
காளிதேவி அம்மா…

ஆண் : அவ ஆக்கி வச்ச சோத்த…
நீ மூக்கு முட்ட புடிச்ச…
அவ ஊத்தி வச்ச கூழை…
உன் நாக்கு ருசிக்க குடிச்ச…

ஆண் : அடி சங்கரியே பைரவியே…
பட்டுனு வரத்தான் எக்குறியே…
பாரேன்டி பாரேன்…
அவ தவிப்பத…
மானம் மாற கொஞ்சம் மாற…
நீ கொதிப்பத…

—BGM—


Notes : Murandu pudikkatha Song Lyrics in Tamil. This Song from Kottai Mariamman (2001). Song Lyrics penned by Kalidasan. முரண்டு பிடிக்காத பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading