கடவுள் தந்த அழகிய வாழ்வு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பி.சரண், கல்பனா & திப்புதேவி ஸ்ரீ பிரசாத்மாயாவி

Kadavul Thanda Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு…
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…

பெண் : கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு…
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு…
இன்னும் வாழனும் நூறு ஆண்டு…

பெண் : எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்…
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்…
அழகே பூமியின் வாழ்கையை…
அன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம்…

பெண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு…
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…

—BGM—

பெண் : பூமியில் பூமியில்…
இன்பங்கள் எங்கும் குறையாது…
வாழ்க்கையில் வாழ்க்கையில்…
எனக்கொன்றும் குறைகள் கிடையாது…
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ…

ஆண் : எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ…
அது வரை நாமும் சென்றிடுவோம்…
விடை பெறும் நேரம் வரும் போதும்…
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்…

ஆண் : பரவசம் இந்த பரவசம்…
எந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே…

ஆண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு…
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…

—BGM—

ஆண் : நாமெல்லாம் சுவாசிக்க…
தனி தனி காற்று கிடையாது…
மேகங்கள் மேகங்கள்…
இடங்களை பார்த்து பொழியாது…

ஆண் : கோடையில் இன்று இலை உதிரும்…
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்…
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்…
குயில்களின் பாட்டு காற்றில் வரும்…

ஆண் : முடிவதும் பின்பு தொடர்வதும்…
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள்தான் நீ கேளடி…

ஆண் : கடவுள் தந்த அழகிய வாழ்வு…
உலகம் முழுதும் அவனது வீடு…
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…

—BGM—


Notes : Kadavul Thanda Song Lyrics in Tamil. This Song from Maayavi (2005). Song Lyrics penned by Pazhani Bharathi. கடவுள் தந்த அழகிய வாழ்வு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading