காத்திருந்தாளே ராஜகுமாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாசுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சுயம்வரம்

Kathirunthaalea Rajakumari Song Lyrics in Tamil


BGM

பெண் : காத்திருந்தாளே ராஜகுமாரி…
காத்திருந்தாளே ராஜகுமாரி…
காவலன் நாளை வருவானா…
காவலன் நாளை வருவானா…

பெண் : பல்லாக்கு அங்கே காத்திருக்கு…
பட்டாடை இங்கே தவமிருக்கு…
காவலன் நாளை வருவானா…
காவலன் நாளை வருவானா…

BGM

பெண் : மனம் போலவே மாங்கல்யமா…
பெரியோரின் வார்த்தை யாவும் பொய்யாச்சு…
வலை வீசுவார் விலை பேசுவார்…
பெண்ணாக மண்ணில் நாங்கள் பிறந்தாச்சு…

பெண் : திருமண சந்தை கூடி இருக்குது…
தேவனும் வருவானா…
உடலை பார்க்கும் ஆடவர் நடுவே…
உள்ளத்தை பார்ப்பானா…

பெண் : பூமாலை நாளை யாரிடமோ…
காவலன் நாளை வருவானா…
காவலன் நாளை வருவானா…

BGM

பெண் : இசை மேடையில் ஒரு வாத்தியம்…
எனை தீண்ட யாருமில்லை என்றதில்லை…
எழில் வானிலே இளம் வெண் புறா…
பறந்தாட பாதை இன்றி போனதில்லை…

பெண் : பொன்னொளி வீசும் வெண்ணிலவே…
அடி உன்னிடம் குறை இல்லையா…
கண்மணிக்காக மின்மினி பூச்சி…
தன்னொளி தரவில்லையா…

பெண் : யாரோடு யாரோ யாரறிவார்…
காவலன் நாளை வருவானா…
காவலன் நாளை வருவானா…

பெண் : காத்திருந்தாளே ராஜகுமாரி…
காவலன் நாளை வருவானா…
காவலன் நாளை வருவானா…

பெண் : பல்லாக்கு அங்கே காத்திருக்கு…
பட்டாடை இங்கே தவமிருக்கு…
காவலன் நாளை வருவானா…
காவலன் நாளை வருவானா…


Notes : Kathirunthaalea Rajakumari Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Mu. Metha. காத்திருந்தாளே ராஜகுமாரி பாடல் வரிகள்.


Scroll to Top