வெற்றிகொடிகட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபாலக்காடு ஸ்ரீராம்ஏ.ஆர்.ரகுமான்படையப்பா

Vetri Kodikattu Song Lyrics in Tamil


—BGM—

குழு : வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா…
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா…
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா…
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா…

{ ஆண் : வெற்றி கொடி கட்டு…
பகைவரை முட்டும் வரை முட்டு…
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா… } * (2)

{ ஆண் : கைதட்டும் உளிபட்டு…
நீ விடும் நெற்றித்துளி பட்டு…
பாறைகள் ரெட்டை பிளவுற்று…
உடைபடும் படையப்பா… } * (2)

{ ஆண் : வெட்டுக்கிளி அல்ல…
நீ ஒரு வெட்டும் புலி என்று…
பகைவரை வெட்டித்தலைகொண்டு…
நடையெடு படையப்பா… } (2)

ஆண் : மிக்கத் துணிவுண்டு…
இளைஞர்கள் பக்கத் துணையுண்டு…
உடன்வர மக்கட்படையுண்டு…
முடிவெடு படையப்பா…

ஆண் : வெற்றி கொடி கட்டு…
பகைவரை முட்டும் வரை முட்டு…
லட்சியம் எட்டும் வரை எட்டு…
படையெடு படையப்பா…

குழு : வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா…
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா…
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா…
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா…

—BGM—

ஆண் : இன்னோர் உயிரை கொன்று…
புசிப்பது மிருகமடா…
இன்னோர் உயிரை கொன்று…
ரசிப்பவன் அரக்கனடா…

ஆண் : யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்…
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்…

—BGM—

ஆண் : யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்…
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்…

ஆண் : நேற்றுவரைக்கும் மனிதனப்பா…
இன்று முதல் நீ புனிதனப்பா…
நேற்றுவரைக்கும் மனிதனப்பா…
இன்று முதல் நீ புனிதனப்பா…

{ ஆண் : வெற்றி கொடி கட்டு…
பகைவரை முட்டும் வரை முட்டு…
லட்சியம் எட்டும் வரை எட்டு…
படையெடு படையப்பா… } * (2)

ஆண் : கைதட்டும் உளிபட்டு…
நீ விடும் நெற்றித்துளி பட்டு…
பாறைகள் ரெட்டை பிளவுற்று…
உடைபடும் படையப்பா…

{ ஆண் : வெட்டுக்கிளி அல்ல…
நீ ஒரு வெட்டும் புலி என்று…
பகைவரை வெட்டித்தலைகொண்டு…
நடையெடு படையப்பா… } * (2)

ஆண் : மிக்கத் துணிவுண்டு…
இளைஞர்கள் பக்கத் துணையுண்டு…
உடன்வர மக்கட்படையுண்டு…
முடிவெடு படையப்பா…

குழு : நேற்றுவரைக்கும் மனிதனப்பா…
இன்று முதல் நீ புனிதனப்பா…
நேற்றுவரைக்கும் மனிதனப்பா…
இன்று முதல் நீ புனிதனப்பா…

ஆண் : வெற்றி கொடி கட்டு…
பகைவரை முட்டும் வரை முட்டு…
லட்சியம் எட்டும் வரை எட்டு…
படையெடு படையப்பா…

—BGM—


Notes : Vetri Kodikattu Song Lyrics in Tamil. This Song from Padaiyappa (1999). Song Lyrics penned by Vairamuthu. வெற்றிகொடிகட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading