மயிலாடும் பாறையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபாண்டி நாட்டு தங்கம்

Mayilaadum Paraiyila Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்…
மதுரை மேங்காட்டு பொட்டலில…
மெடலு வாங்கி இருக்கோம்…

பெண் : மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்…
மதுரை மேங்காட்டு பொட்டலில…
மெடலு வாங்கி இருக்கோம்…

ஆண் : நாங்க போகாத ஊருமில்ல…
நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல…

பெண் : நாங்க போகாத ஊருமில்ல…
நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல…

ஆண் : அட மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்…
பெண் : மதுரை மேங்காட்டு பொட்டலில…
மெடலு வாங்கி இருக்கோம்… ஹோ…

—BGM—

பெண் : திருச்சி சேலம் தஞ்சாவூர் காஞ்சி…
பொள்ளாச்சி போனேன்…
ராணி போல நாட்டியமாடி…
பெறும் பேர் ஆனேன்…

ஆண் : பேறு பெற்ற சென்னையில…
பரிசு பல வாங்கி வந்தேன்…

பெண் : பெரியவங்க கையிலதான்…
பதக்கம் பல பெற்று வந்தேன்…

ஆண் : ஆட்டம் பாட்டத்தில…
என்னை யாரும் ஜெயிக்க வரல…

பெண் : கூடும் கூட்டத்தில…
என்னை எதுக்க யாரும் வரல…

ஆண் : தாள கட்டுக்குள்ள ராக மெட்டுக்குள்ள…
என்னை எதுத்து பாடி பாரு…

பெண் : தாம் த தகிட தீம் தாம் த தகிட தீம்…
எனக்கு யாரு ஈடு ஈடு…

ஆண் : மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்…
மதுரை மேங்காட்டு பொட்டலில…
மெடலு வாங்கி இருக்கோம்… ஹான்…

பெண் : நாங்க போகாத ஊருமில்ல…
நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல…
நாங்க போகாத ஊருமில்ல…
நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல…
ஆண் : தகிட தகிட…

—BGM—

ஆண் : பாடும் குயிலு பாத்த மயிலு ஆஹா ஒயிலு…
அபபபப்பா அப்பா…
ஆடும் போதும் பாடும் போதும்…
அது ஒரு ஸ்டைலு…
பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

பெண் : தாளம் ஏதும் தப்பவில்ல…
பாடும் சுதி விட்டதில்ல…

ஆண் : மேளம் இன்னும் கொட்டவில்லை…
தாலி கொடி கட்டவில்லை…

பெண் : பாட்ட கட்டி வச்சு…
பாடி நிக்குறேன் கூட நிக்குறேன்…

ஆண் : நாட்டு சக்கரையே பாத்து சொக்குறேன்…
காத்து நிக்குறேன்…

பெண் : ஜாதி மல்லிகைய சேத்து கையில தான்…
சூடி எடுக்க நாளு பாரு…

ஆண் : தாம் த தகிட தீம் தாம் த தகிட தீம்…
தாளம் எடுத்து பாடி பாரு…

பெண் : மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்…
மதுரை மேங்காட்டு பொட்டலில…
மெடலு வாங்கி இருக்கோம்…

ஆண் : போடு… மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்…
மதுரை மேங்காட்டு பொட்டலில…
மெடலு வாங்கி இருக்கோம்…

பெண் : நாங்க போகாத ஊருமில்ல…
நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல…

ஆண் : நாங்க போகாத ஊருமில்ல…
நாங்க இப்ப வாங்காத பேரும் இல்ல… ஹோய்…


Notes : Mayilaadum Paraiyila Song Lyrics in Tamil. This Song from Paandi Nattu Thangam (1989). Song Lyrics penned by Gangai Amaran. மயிலாடும் பாறையில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading