முத்து மணி மாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாஇளையராஜாசின்ன கவுண்டர்

Muthumani Malai Song Lyrics in Tamil


BGM

ஆண் : முத்து மணி மாலை…
உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட…
வெட்கத்துல சேலை…
கொஞ்சம் விட்டு விட்டுப் போராட…

ஆண் : உள்ளத்தில நீதானே…
உத்தமி உன் பேர்தானே…
ஒரு நந்தவனப் பூதானே…
புது சந்தனமும் நீதானே…

ஆண் : முத்து மணி மாலை…
உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கொலுசுதான் மெளனமாகுமா…
மனசுதான் பேசுமா…

ஆண் : மேகம்தான் நிலவை மூடுமா…
மவுசு தான் குறையுமா…

பெண் : நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு…
காசிப்பட்டு தந்த ராசாவே…

ஆண் : வாக்கப்பட்டு வந்த வாசமலரே…
வண்ணம் கலையாத ரோசாவே…

பெண் : தாழம்பூவுல வீசும் காத்துல…
வாசம் தேடி மாமா வா…

ஆண் : முத்து மணி மாலை…
பெண் : என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட…

ஆண் : வெட்கத்துல சேலை…
பெண் : கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட…

BGM

ஆண் : காலிலே போட்ட மிஞ்சிதான்…
காதுல பேசுதே…

பெண் : கழுத்துல போட்ட தாலிதான்…
காவியம் பாடுதே…

ஆண் : நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்…
பொட்டுவச்சதாரு நான்தானே…

பெண் : அத்திமரப்பூவும் அச்சப்படுமா…
பக்கத்துணையாரு நீதானே…

ஆண் : ஆசை பேச்சுல பாதி மூச்சுல…
லேசா தேகம் சூடேற…

பெண் : முத்து மணிமாலை…
என்னைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட…
வெட்கத்துல சேலை…
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட…

பெண் : உள்ளத்தில நீதானே…
உத்தமனும் நீதானே…
இது நந்தவனப் பூதானே…
புது சந்தனமும் நீதானே…

ஆண் : ஒரு நந்தவனப் பூதானே…
புது சந்தனமும் நீதானே…


Notes : Muthumani Malai Song Lyrics in Tamil. This Song from Chinna Gounder (1992). Song Lyrics penned by R.V. UdhayaKumar. முத்து மணி மாலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading