ஓஹோ மேகம் வந்ததோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாமௌன ராகம்

Oho Megam Vandhadho Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓஹோ மேகம் வந்ததோ…
ஏதோ ராகம் தந்ததோ…
எல்லாம் பூவுக்காகத்தான்…
பாடும் பாவைக்காகத்தான்…

பெண் : பூக்கள் மேல் நீர்த்துளிகள்…
வெண் பாக்கள் பாடாதோ…
தூறல் போடும் நேரம்…
பூஞ்சாரல் வீசாதோ…

குழு : ஓஹோ மேகம் வந்ததோ…
ஏதோ ராகம் தந்ததோ…

BGM

பெண் : யாரும் சொல்லாத காவியம்…
ஆடை கொண்டிங்கு ஆடுது…
நேரம் வந்தாலென்ன பொன்னோவியம்…
வண்ணம் மாறாமல் மின்னுது…

பெண் : நான் பெண்ணானது கல்யாணம் தேடவா…
குழு : ஓ கண்ணாளன் வந்து பூமாலை போடவா…
ஹே அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்…

பெண் : யார் வந்தாலுமென்ன திரும்பாது ஞாபகம்…
பூவிலங்கு தேவையில்லையே…

BGM

குழு : ஓஹோ மேகம் வந்ததோ…
ஏதோ ராகம் தந்ததோ…

BGM

பெண் : கால்கள் எங்கேயும் ஓடலாம்…
காதல் இல்லாமல் வாழலாம்…
வண்ண மின்னல்களாய் நின்றாடலாம்…
வாழ்வில் சங்கீதம் பாடலாம்…

பெண் : நாம் இந்நாளிலே சிட்டாக மாறலாம்…
குழு : வா செவ்வானம் இன்று ஜிவ்வின்று ஏறலாம்…
நாம் எல்லோருமே செம்மீன்கள் ஆகலாம்…

பெண் : வா நீரோடை எங்கும் வெள்ளோட்டம் போகலாம்…
வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம்…

BGM

பெண் : ஓஹோ மேகம் வந்ததோ…
ஏதோ ராகம் தந்ததோ…
எல்லாம் பூவுக்காகத்தான்…
பாடும் பாவைக்காகத்தான்…

பெண் : பூக்கள் மேல் நீர்த்துளிகள்…
வெண்பாக்கள் பாடாதோ…
தூறல் போடும் நேரம்…
பூஞ்சாரல் வீசாதோ…

குழு : ஓஹோ மேகம் வந்ததோ…
ஏதோ ராகம் தந்ததோ…

BGM


Notes : Oho Megam Vandhadho Song Lyrics in Tamil. This Song from Mouna Ragam (1986). Song Lyrics penned by Vaali . ஓஹோ மேகம் வந்ததோ பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top