மன்றம் வந்த தென்றலுக்கு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமௌன ராகம்

Mandram Vantha Thendralukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…

ஆண் : தொட்டவுடன் சுட்டதென்ன…
கட்டழகு வட்ட நிலவோ…
கண்ணே என் கண்ணே…

ஆண் : பூபாளமே கூடாதெனும்…
வானம் உண்டோ சொல்…

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…

BGM

ஆண் : மேடையைப் போல வாழ்க்கை அல்ல…
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல…
ஓடையைப் போலே உறவும் அல்ல…
பாதைகள் மாறியே பயணம் செல்ல…

ஆண் : விண்ணோடுதான் உலாவும்…
வெள்ளி வண்ண நிலாவும்…
என்னோடு நீ வந்தால் என்ன வா…

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…

ஆண் : தொட்டவுடன் சுட்டதென்ன…
கட்டழகு வட்ட நிலவோ…
கண்ணே என் கண்ணே…

ஆண் : பூபாளமே கூடாதெனும்…
வானம் உண்டோ சொல்…

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…

BGM

ஆண் : தாமரை மேலே நீர்த்துளி போல்…
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன…
நண்பர்கள் போலே வாழ்வதற்கு…
மாலையும் மேளமும் தேவையென்ன…

ஆண் : சொந்தங்களே இல்லாமல்…
பந்த பாசம் கொள்ளாமல்…
பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்…

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…

ஆண் : தொட்டவுடன் சுட்டதென்ன…
கட்டழகு வட்ட நிலவோ…
கண்ணே என் கண்ணே…

ஆண் : பூபாளமே கூடாதெனும்…
வானம் உண்டோ சொல்…

ஆண் : மன்றம் வந்த தென்றலுக்கு…
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ…
அன்பே என் அன்பே…


Notes : Mandram Vantha Thendralukku Song Lyrics in Tamil. This Song from Mouna Ragam (1986). Song Lyrics penned by Vaali . மன்றம் வந்த தென்றலுக்கு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top