வேறெதுவும் நிஜமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண்நிவாஸ் கே பிரசன்னாஜீரோ

Veredhuvum Nijamae Illai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வேறெதுவும் நிஜமே இல்லை…
நாம் இருவர் நிஜமே…
வேறெதுவும் கனவே இல்லை…
நாம் இருவர் கனவே…

ஆண் : வழியும் துளிகள் நிஜமா இல்லை…
துடைக்கும் விரலோ நிஜமே…
இதழின் முத்தம் கனவா இல்லை…
முடியும் நொடியோ கனவே…

ஆண் : உயிரே உயிரே விழியோ நிஜமே…
அழகே அழகே இமைதான் கனவே…
இரவாய்… திறவாயடி…

—BGM—

ஆண் : வேறெதுவும் நிஜமே இல்லை…
நாம் இருவர் நிஜமே… ஹே…

—BGM—

ஆண் : இருளிலே புதைகிறாய்…
ஒளியென வருகிறேன்…
ஒலியிலே தொலைகிறாய்…
அமைதியை தருகிறேன்…

ஆண் : எதனால் விழியில் மயக்கம்…
எதனால் மனதில் தயக்கம்…
உறவே உறவே சிறகோ நிஜமே…
இணையே இணையே வானோ கனவே…
பறவாயடி… பறவாயடி…

ஆண் : வேறெதுவும் நிஜமே இல்லை…
நாம் இருவர் நிஜமே…

ஆண் : வழியும் துளிகள் நிஜமா இல்லை…
துடைக்கும் விரலோ நிஜமே…
இதழின் முத்தம் கனவா இல்லை…
முடியும் நொடியோ கனவே…

—BGM—


Notes : Veredhuvum Nijamae Illai Song Lyrics in Tamil. This Song from Zero (2016). Song Lyrics penned by Madhan Karky. வேறெதுவும் நிஜமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading