வெண்ணிலவுக்கு வானத்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாதாலாட்டு பாடவா

Vennilavukku Vaanatha Song Lyrics in Tamil

ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…

BGM

ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…

ஆண் : தென்றலே கொஞ்சம் நீ கேளு…
இந்த சேதிய அங்கு நீ கூறு…
ஏ… தென்றலே கொஞ்சம் நீ கேளு…
இந்த சேதிய அங்கு நீ கூறு…
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…

BGM

பெண் : உன்னை விட சொந்தம் எது…
அன்பை விட சொர்க்கம் எது…
உன்னைவிட்டு நெஞ்சம் இது…
எங்கே வாழப் போகின்றது…

ஆண் : கண்ணைத் தொட்டு வாழும் இமை…
என்றும் தனியாகாதம்மா…
உன்னையன்றி என் ஜீவன்தான்…
இங்கே இனி வாழாதம்மா…

பெண் : உன்னோடு இல்லாத என் வாழ்வு…
எப்போதும் ஏது ஏது…
ஆண் : ஒன்றான பின்னாலும் கண்மூட…
நேரங்கள் ஏது ஏது…
பெண் : இது வானம் என வாழும் இனி மாறாது…

ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா…
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா…

BGM

ஆண் : சிந்தும் மழைச் சாரல் விழ…
அங்கம் அதில் மோகம் எழ…
சொந்தம் ஒரு போர்வை தர…
சொர்க்கம் அது நேரில் வர…

பெண் : கன்னம் மது தேனைத் தர…
கண்ணன் அதை நேரில் பெற…
கன்னிக் குயில் தோளில் வர…
இன்பம் சுகம் இங்கே வர…

ஆண் : எந்நாளும் இல்லாத எண்ணங்கள்…
முன்னோட ஏக்கம் கூட…
பெண் : என்னுள்ளம் காணாத வண்ணங்கள்…
வந்தாட தூக்கம் ஓட…
ஆண் : அலை போல மனம் ஓட புதுப் பண் பாட…

பெண் : வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா…
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா…
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா…
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா…

பெண் : தென்றலே கொஞ்சம் நீ கேளு…
இந்த சேதிய அங்கு நீ கூறு…
ஏ… தென்றலே கொஞ்சம் நீ கேளு…
இந்த சேதிய அங்கு நீ கூறு…
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது…

பெண் : வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா…
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா…

Notes : Vennilavukku Vaanatha Song Lyrics in Tamil. This Song from Thalattu Padava (1990). Song Lyrics penned by Gangai Amaran. வெண்ணிலவுக்கு வானத்தை பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading