நீதானா நீதானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகி & அருண்மொழிஇளையராஜாதாலாட்டு பாடவா

Neethana Neethana Song Lyrics in Tamil


BGM

பெண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா…
நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா…

பெண் : அன்பே அன்பே எந்தன் அன்பே…
வாழும் ஜீவன் நீதான் அன்பே…
துணை நீயே அன்பே…

பெண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா…
நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா…

BGM

பெண் : காவிரியும் வழி மறந்து…
வேறு திசை நடப்பதில்லை…
கன்னி இளம் நினைவுகளை…
காதல் மனம் மறப்பதில்லை…

பெண் : காதல் அலை வீசும் கடல்தான் மனது…
காலம் பல காலம் இது வாழுவது…

பெண் : தூங்காமல் என் கண்கள் வாடும் பொழுது…
தோள் மீது சாய்ந்தாட ஏங்கியது…
நீ இன்றி நானேது…
நேசமோடு வாழும் மாது…

பெண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா…
ஆண் : நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா…

ஆண் : அன்பே அன்பே எந்தன் அன்பே…
வாழும் ஜீவன் நீதான் அன்பே…
துணை நீயே அன்பே…

ஆண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா…
நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா…

BGM

ஆண் : கூவி வரும் புதுக் குயிலின்…
குரல் வழியே ஒரு துயரம்…
பாடி வரும் மொழிதனிலே…
பாதியிலே ஒரு சலனம்…

ஆண் : ஓடும் நதி நீரில் மலர் பூப்பதில்லை…
உண்மை இதை கண்டும் மனம் கேட்பதில்லை…

ஆண் : காலங்கள் நேரங்கள் பாலம் அமைக்கும்…
கையோடு கையென்று சேர்ந்திருக்கும்…
வாடாதே வாடாதே வாசம் இந்த பூவைத் தேடும்…

ஆண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா…
பெண் : நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா…

ஆண் : அன்பே அன்பே எந்தன் அன்பே…
பெண் : வாழும் ஜீவன் நீதான் அன்பே…
துணை நீயே அன்பே…

பெண் : நீதானா நீதானா நெஞ்சே நீதானா…
ஆண் : நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா…


Notes : Neethana Neethana Song Lyrics in Tamil. This Song from Thalattu Padava (1990). Song Lyrics penned by Gangai Amaran. நீதானா நீதானா பாடல் வரிகள்.


Scroll to Top