ஆலயமணியின் ஓசையை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபாலும் பழமும்

Aalayamanyin Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்…

BGM

பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்…

பெண் : உன் இறைவன் அவனே அவனே…
என பாடும் ஒலி கேட்டேன்…
உன் தலைவன் அவனே அவனே…
எனும் தாயின் மொழி கேட்டேன்…

பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்…

BGM

பெண் : இளகும் மாலை பொழுதினிலே…
என் இறைவன் வந்தான் தேரினிலே…
இளகும் மாலை பொழுதினிலே…
என் இறைவன் வந்தான் தேரினிலே…

பெண் : ஏழையின் இல்லம் இதுவென்றான்…
இரு விழியாலே மாலை இட்டான்…
இரு விழியாலே மாலையிட்டான்…

பெண் : உன் இறைவன் அவனே அவனே…
என பாடும் ஒலி கேட்டேன்…
உன் தலைவன் அவனே அவனே…
எனும் தாயின் மொழி கேட்டேன்…

பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்…

BGM

பெண் : காதல் கோயில் நடுவினிலே…
கருணை தேவன் மடியினிலே…
காதல் கோயில் நடுவினிலே…
கருணை தேவன் மடியினிலே…

பெண் : யாரும் அறியா பொழுதினிலே…
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே…
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே…

பெண் : உன் இறைவன் அவனே அவனே…
என பாடும் ஒலி கேட்டேன்…
உன் தலைவன் அவனே அவனே…
எனும் தாயின் மொழி கேட்டேன்…

பெண் : ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்…
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்…

BGM


Notes : Aalayamanyin Song Lyrics in Tamil. This Song from Palum Pazhamum (1961). Song Lyrics penned by Kannadasan. ஆலயமணியின் ஓசையை பாடல் வரிகள்.


Scroll to Top