பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | பாலும் பழமும் |
Naan Pesa Ninaippathellam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்…
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்…
உறவாட வேண்டும்…
—BGM—
பெண் : நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்…
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்…
உறவாட வேண்டும்…
—BGM—
ஆண் : நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்…
நீ காண வேண்டும்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் : நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்…
நானாக வேண்டும்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ஆண் & பெண் : நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்…
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்…
உறவாட வேண்டும்…
பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
—BGM—
பெண் : பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்…
உனக்காக வேண்டும்…
பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும்…
பசியாற வேண்டும்…
பெண் : மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்…
நானாக வேண்டும்…
ஆண் : ம்ம்ம் ம்ம்ம்…
பெண் : மடி மீது விளையாடும் சேயாக வேண்டும்…
நீயாக வேண்டும்…
ஆண் : ம்ம்ம் ம்ம்ம்…
பெண் : நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்…
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்…
உறவாட வேண்டும்…
—BGM—
பெண் : சொல் என்றும் மொழி என்றும்…
பொருள் என்றும் இல்லை…
பொருள் என்றும் இல்லை…
பெண் : சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை…
விலை ஏதும் இல்லை…
பெண் : ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே…
உயிர் சேர்ந்த பின்னே…
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை…
வேறேதும் இல்லை…
பெண் : நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்…
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்…
உறவாட வேண்டும்… ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
Notes : Naan Pesa Ninaippathellam Song Lyrics in Tamil. This Song from Palum Pazhamum (1961). Song Lyrics penned by Kannadasan. நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் வரிகள்.