போனால் போகட்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபாலும் பழமும்

Ponaal Pogattum Song Lyrics in Tamil


BGM

ஆண் : போனால் போகட்டும் போடா…
போனால் போகட்டும் போடா…
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா…

ஆண் : போனால் போகட்டும் போடா…
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா…
போனால் போகட்டும் போடா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வந்தது தெரியும் போவது எங்கே…
வாசல் நமக்கே தெரியாது…
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில்…
நமக்கே இடமேது…

ஆண் : வாழ்க்கை என்பது வியாபாரம்…
வரும் ஜனனம் என்பது வரவாகும்…
அதில் மரணம் என்பது செலவாகும்…

ஆண் : போனால் போகட்டும் போடா…
போனால் போகட்டும் போடா…
போனால் போகட்டும் போடா…
போனால் போகட்டும் போடா…

BGM

ஆண் : இரவல் தந்தவன் கேட்கின்றான்…
அதை இல்லை என்றால் அவன் விடுவானா…
உறவைச் சொல்லி அழுவதனாலே…
உயிரை மீண்டும் தருவானா…

ஆண் : கூக்குரலாலே கிடைக்காது…
இது கோர்ட்டுக்கு போனால் ஜெய்க்காது…
அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது…

ஆண் : போனால் போகட்டும் போடா…
போனால் போகட்டும் போடா…
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா…

ஆண் : போனால் போகட்டும் போடா…

BGM

ஆண் : எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்…
இதற்கொரு மருந்தைக் கண்டேனா…
இருந்தால் அவளைத் தன்னந்தனியே…
எரியும் நெருப்பில் விடுவேனா…

ஆண் : நமக்கும் மேலே ஒருவனடா…
அவன் நாலும் தெரிந்த தலைவனடா…
தினம் நாடகமாடும் கலைஞனடா…

ஆண் : போனால் போகட்டும் போடா…
போனால் போகட்டும் போடா…
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா…

ஆண் : போனால் போகட்டும் போடா…
போனால் போகட்டும் போடா…
போனால் போகட்டும் போடா…

BGM


Notes : Ponaal Pogattum Song Lyrics in Tamil. This Song from Palum Pazhamum (1961). Song Lyrics penned by Kannadasan. போனால் போகட்டும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading