வெண்ணிலவே வெண்ணிலவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன்சிற்பிகண்ணன் வருவான்

Vennilavae Vennilavae Song Lyrics in Tamil


ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…

ஆண் : தொலை தூரம் நின்றும் நீ…
ஏன் வெட்கம் கொள்கிறாய்…
உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய்…

—BGM—

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…

—BGM—

ஆண் : அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை…
அந்த முகிலை எடுத்து முகத்தை துடைத்து விடவா…
அந்த சுகமான நாட்கள் இனி தினம்தோறும் வேண்டும்…
உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா…

ஆண் : அடி உன்னை காணத்தான்…
நான் கண்கள் வாங்கினேன்…
உன்னோட சேரத்தான் என் உயிரை தாங்கினேன்…

—BGM—

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…

—BGM—

ஆண் : கண்ணோடு கண்ணும்…
ஒரு நெஞ்சோடு நெஞ்சும்…
வந்து பழகும் பொழுதில் இடையில் ஏது வார்த்தை…

ஆண் : தொலை தூரம் நீயும்…
தொட முடியாமல் நானும்…
என்று தவிக்கும் பொழுதில் இனிக்கவில்லை வாழ்க்கை…

ஆண் : என் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேட்குதா…
நான் தூவும் பூவிதை உன் நெஞ்சில் பூக்குதா…

—BGM—

ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா…
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா…

ஆண் : தொலை தூரம் நின்றும் நீ…
ஏன் வெட்கம் கொள்கிறாய்…
உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய்…

—BGM—


Notes : Vennilavae Vennilavae Song Lyrics in Tamil. This Song from Kannan Varuvaan (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading