எனைக் காணவில்லையே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம், ஓ.எஸ். அருண் & ரஃபிஏ.ஆர்.ரகுமான்காதல் தேசம்

Ennai Kaanavillaiye Song Lyrics in Tamil


ஆண் : அன்பே… அன்பே…
அன்பே… அன்பே…

—BGM—

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா…
என் நிழலும் நீயெனப் புரியாதா…
உடல் நிழலைச் சேரவே முடியாதா…
அன்பே… அன்பே…

ஆண் : நடை போடும் பூங்காற்றே…
பூங்காற்றே…

ஆண் : வா வா…

குழு (ஆண்கள்) : என் வாசல்தான்…

ஆண் : வந்தால்…

குழு (ஆண்கள்) : வாழ்வேனே நான்…

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

—BGM—

ஆண் : ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்…
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்…
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்…
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்…

ஆண் : நான் என்று சொன்னாலே…
நான் அல்ல நீதான்…
நீ இன்றி வாழ்ந்தாலே…
நீர்கூடத் தீதான்…
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்…

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா…
என் நிழலும் நீயெனப் புரியாதா…
உடல் நிழலைச் சேரவே முடியாதா…
அன்பே… அன்பே…

—BGM—

ஆண் : நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்…
நீ என்னை நீங்கிச் சென்றாலே…
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்…
நீ எந்தன் பக்கம் நின்றாலே…

ஆண் : மெய்யாக நீ என்னை…
விரும்பாத போதும்…
பொய் ஒன்று சொல் கண்ணே…
என் ஜீவன் வாழும்…
நிஜம் உந்தன் காதலென்றால்…

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா…
என் நிழலும் நீயெனப் புரியாதா…
உடல் நிழலைச் சேரவே முடியாதா…
அன்பே… அன்பே…

ஆண் : நடை போடும் பூங்காற்றே…
பூங்காற்றே…

ஆண் : வா வா…

குழு (ஆண்கள்) : என் வாசல்தான்…

ஆண் : வந்தால்…

குழு (ஆண்கள்) : வாழ்வேனே நான்…

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

—BGM—


Notes : Ennai Kaanavillaiye Song Lyrics in Tamil. This Song from Kadhal Desam (1996). Song Lyrics penned by Vaali. எனைக் காணவில்லையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading